சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ45 லட்சம் மேல் கொரோனா நிதி திரட்டிய நடிகர் டி.எம்.கார்த்திக்.. வளர்ந்து வரும் நடிகரின் சமூக அக்கறை

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நிவாரணமாக இது வரை ரூ 45 லட்சத்திற்கும் மேலான பணத்தை நடிகர் டி.எம்.கார்த்திக் சேகரித்துள்ளார்.

கொரோனா வைரஸால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் நிறைய மக்கள் வேலையை இழந்துள்ளனர்.

பல மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும் ஆன்லைன் வகுப்புகளில் படிக்க முடியாமலும் தாய், தந்தையருடன் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.

 கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம் கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்

கொரோனா நிவாரணம்

கொரோனா நிவாரணம்

இந்த நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அது போல் தன்னார்வலர்களும் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். அது போல் நடிகர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் தங்களால் முடிந்ததை செய்து வருகிறார்கள்.

விஸ்வாசம்

விஸ்வாசம்

அந்த வகையில் ராஜா ராணி, தில்லுக்கு துட்டு 2, விஸ்வாசம், கூர்கா, ஆடை, ஜாம்பி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி, சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்துள்ளார். கார்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கார்த்திக் இதுவரை 500-க்கும் மேற்பட்ட மேடைகளில் பணியாற்றியுள்ளார்.

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

இவர் கொரோனா நிவாரண நிதியை திரட்டி பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரத்தை திருப்பி கொடுத்து வருகிறார். சொந்த பணம் மற்றும் நண்பர்கள், தன்னார்வலர்களிடம் இருந்து ரூ 45 லட்சத்திற்கும் மேலான நிதியை இதுவரை டி.எம்.கார்த்திக் திரட்டியுள்ளார்.

15 மாணவர்கள் கல்வி

15 மாணவர்கள் கல்வி

இந்த பணத்தின் மூலம் வேலையை இழந்தவர்களுக்கு உதவியுள்ளார். 15 மாணவர்கள் கல்வி கற்கவும், தனித்து விடப்பட்ட விலங்குகளை மீட்கவும் , விவசாயிகள் காளை மாடுகளை வாங்கி ஏர் உழவும், பல கிராமங்களில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் வாங்குவதற்கு இவரது சேகரித்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

English summary
Actor T.M.Karthik has collected more than 45 lakhs for Coronavirus relief fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X