சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்னா‘ரம்’.. பூவா‘ரம்’.. இன்னைக்கு உலக பீர் நாளாம்.. அப்பக்கூட நம்ம தலைவர்தான் ஞாபகத்துக்கு வர்றாரு

சர்வதேச பீர் நாளையொட்டி வடிவேலு நடித்த சில காமெடி காட்சிகளின் தொகுப்பு.

Google Oneindia Tamil News

சென்னை: நம்மலாம் சின்னப் புள்ளையா இருக்கும் போது தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான்னு பண்டிகை நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இப்போதெல்லாம் இணையத்தால் உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விட தினமும் ஏதாவது ஒரு நாளைச் சொல்லி கொண்டாடி விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

சர்வதேச நண்பர்கள் தினம், தேசிய நண்பர்கள் தினம், ஆகஸ்ட்டில் வரும் நண்பர்கள் தினம் என கட்ந்த சில நாட்களுக்கு முன்பு வெவ்வேறுந் ஆளில் நண்பர்கள் தினத்தைக் கொண்ஆடி மகிழ்ந்தனர்.

அந்த வரிசையில் இன்று சர்வதேச பீர் தினமாம். சும்மாவே ஆடுவார்கள் இப்படி சலங்கைக் கட்டி விட்டால் சும்மா இருப்பார்களா.. சமூகவலைதளத்தில் இது தான் இப்போது 'ஹாட்' டாப்பிக்கே.

தமிழ் சினிமா காமெடி வரலாற்றை வடிவேலு இல்லாமல் எழுத முடியாது என்றால், வடிவேலுவின் காமெடி வரலாற்றை அவர் நடித்த செம காமெடி போதைக் காட்சிகள் இல்லாமல் எழுத முடியாது. அந்தளவிற்கு மீம்ஸ் தலைவர் வடிவேலு வெரைட்டியான 'பீர்' காட்சிகளில் நடித்துள்ளார்.

இதோ பீர் டே என்றதும் நமக்கு நினைவில் வந்த அவரது ஜாலியான சில காமெடிக் காட்சிகளின் தொகுப்பு உங்களுக்காக...

ஹலோ பிரபா ஒயின்ஸ் ஓனரா?

வடிவேலுவின் காமெடிக் காட்சிகளில் எப்போதுமே அதிக ‘கிக்'கானது பிரபா ஒயின்ஸ் காமெடி தான். மதுபானக் கடைக்குள் மாட்டிக் கொண்ட வடிவேலு, அங்கிருந்தபடி ( அதுவும் குடித்துக் கொண்டே..) அதன் ஓனருக்கே கால் செய்து, ‘ஹலோ பிரபா ஒயின்ஸ் ஓனரா? கடையை எப்ப சார் திறப்பீங்க?' எனக் கேட்பது வேற லெவல் காமெடி.

பொன்னா‘ரம்’.. பூவா‘ரம்’

வடிவேலுவின் காக்டெயில் காமெடி என்றே இதனைக் கூறலாம். டாக்டர் சரக்கை நினைத்தே பார்க்கக் கூடாது என சொல்லி விட, சோதனைக்கென்றே வடிவேலுவைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் அவருக்கு மதுவை ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஒரே காமெடியில் ரம், பிராந்தி, ஜின் என எல்லா சரக்கையும் வைத்து ஒரு கை பார்த்து விடுவார் வடிவேலு.

அது வேற வாய்.. இது நாற வாய்

மீம்ஸ்களில் மிகவும் பிரபலமானது இந்த ‘அது வேற வாய்.. இது வேற வாய்..' காமெடி. மது பிரியர்கள் ( இப்படித்தான் மரியாதையா சொல்லணும் பாஸ்..) பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு. இதை தன் ஸ்டைலில் இந்தக் காமெடியில் அழகாக கிச்சுகிச்சு மூட்டி சொல்லி இருப்பார் வடிவேலு.

பீருக்கு ஆசைப்பட்டு

இந்தக் காமெடியில் பாவம் சரக்கிற்கு ஆசைப்பட்டு பேய் பிடித்தது போல் ஆடுவார் வடிவேலு. என்ன தந்தால் பேய் ஓடும் என கேட்க வரிசையாக சரக்கின் பெயராக அடுக்குவார். ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பாவம் கடைசியில் அடி வாங்குவார்.

உடம்பெல்லாம் விஷம்டா..

வடிவேலு நடித்த கதாபாத்திரங்களில் சூனாபானாவும் ஒன்று. காதல் தோல்வியின் மதுவில் விஷம் கலந்து ஒருவர் குடிக்கப் போக, உண்மை தெரியாமல் வடிவேலு அதனைக் குடித்து விடுவதும், அதற்குப் பின் நடக்கும் அலப்பறைகளும் மரண காமெடி. இதில், ‘அண்ணனுக்கு உடம்பெல்லாம் விஷம்டா' என்ற டயலாக்கு வேறு.

என்னாது இது சின்னபுள்ளைத்தனமா?

பார்த்திபனும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த காமெடிகள் எல்லாமே காலத்தால் அழியாதவை. அதில் ஒன்று தான் இந்த நூறு ரூபாய் காமெடி. இதில் பார்த்திபன், வடிவேலுவை மட்டுமல்ல, கொஞ்சம் நம்மையும் சேர்த்தே குழப்பி விடுவார். வடிவேலுவை பார்த்திபன் வைத்து செய்வதைப் பார்த்து மற்ற குடிமகன்கள் சிரிக்க, ‘என்னாது இது சின்னப்புள்ளத்தனமால இருக்கு.. இது யாரோட காசுடா?' என வடிவேலு கோபமாகி நம்மை சிரிக்க வைத்திருப்பார்.

தண்ணியக் குடிச்சதுக்கேவா..

வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு வடிவேலு செய்யும் அலப்பறைகள் அல்டிமேட் காமெடி. காலில் வணக்கம் வைப்பது, வாட்டர் பாக்கெட்டை மது என நினைத்து ரசித்து ருசித்துக் குடிப்பது என இந்த காமெடி மரண பங்கம்.

சித்தப்பாவுக்கு மரியாதை

மது குடிப்பதற்கு பார்ட்னரை வயது வித்தியாசமில்லாமல் சேர்த்தால் இப்படித்தான் இருக்கும். பாவம் சுந்தர்ராஜன் வடிவேலு, லிவிங்ஸ்டனிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது செம காமெடி.
மேலே கூறியதெல்லாம் வடிவேலுவின் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். இன்னும் சொல்லிக் கொண்டே போவதென்றால் ஒரு தொடராகத்தான் எழுத வேண்டும். அந்தளவிற்கு தலைவர் காமெடியில் அதகளம் பண்ணி இருக்கிறார்.

English summary
Theses are some interesting memories of actor Vadivelu on World beer day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X