சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாம கோல் அடிக்க ஆசைப்படுவோம்.. அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.. விஜய் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijay speech in Bigil Audio launch | சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

    சென்னை: வாழ்க்கையும் கால்பந்து விளையாட்டு மாதிரி தான், நாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம், ஆனால் அதை தடுக்க ஒரு கூட்டமே வரும் என பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

    அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மெர்சலுக்கு பிறகு இணைந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    actor vijay speech on politics with football game at bigil movie audio launch

    பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை சிங்கப் பெண்ணே, உனக்காக என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று மாலை பிரம்மாண்டமாக நடந்தது.

    இந்த விழாவில் வழக்கம் நடிகர் விஜய் அரசியல் பேசினார். அண்மைக்காலமாக மெர்சல், சர்கார் என ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசிவரும் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசினார். அதுவும் ஆளும் கட்சியினரை நேரடியாக தாக்கும் வகையில் சுபஸ்ரீ மரணம் குறித்து பேசினார்.

    அதேநேரம் ரசிகர்களுக்கு வாழ்க்கை குறித்து தத்துவம் கூறும் விதமாகவும் சில கருத்துக்களை பேசினார். " வாழ்ககை ஒரு கால்பந்து விளையாட்டு மாதிரிதான். நாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒரு கூட்டம் வரும். நம்ம கூட இருக்குறவனே சேம்சைட் கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க.. உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை கொண்டுவாருங்கள். புடிச்சா எடுத்துக்கோங்க; இல்லைனா விட்டுருங்க. உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகர்கள் தான் என பெருமிதம் தெரிவித்தார்.

    English summary
    actor vijay speech on politics with football game at bigil movie audio launch at chennai on yesterday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X