சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரசிகர்கள் முடிவெடுத்தாச்சு.. விஜய் வாய்ஸ் தர வேண்டியது மட்டும்தான் பாக்கி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ரசிகர்கள் முடிவெடுத்தாச்சு, விஜய் வாய்ஸ் தர வேண்டும்- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் நடிகர் விஜய் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    நடிகர் விஜய்க்கு அரசியல் புதிது கிடையாது. சர்க்கார் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவ்வப்போது சத்தமே இல்லாமல் அரசியல் செய்வது நடிகர் விஜயின் வழக்கம்.

    கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும்படி தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் நடிகர் விஜய். காரணம், அப்போது திமுக தரப்பிலிருந்து விஜய்க்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள்.

    தினகரனை வைத்து சூப்பர் பிளான் போட்ட பாஜக.. சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு இதுதான் காரணமா?தினகரனை வைத்து சூப்பர் பிளான் போட்ட பாஜக.. சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு இதுதான் காரணமா?

    அணிலாக உதவினார்

    அணிலாக உதவினார்

    அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு அமைந்த பிறகு நானும் ஒரு அணில் போல இந்த வெற்றிக்கு, உதவியதாக கருத்து தெரிவித்தார் விஜய். ஆனால் அதன்பிறகு எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், நேரடியாக ஆதரவு தெரிவித்தது இல்லை விஜய். ஆனால் மெர்சல் திரைப்படத்திற்கு பாஜக தலைவர்களிடமிருந்தும், சர்க்கார் திரைப்படத்திற்கு அதிமுகவினரிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்தன.

    விஜய் ரசிகர்கள்

    இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவரின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். வசந்தகுமாருக்கு பொன்னாடை போர்த்திய விஜய் ரசிகர்கள், விஜய்யையும், வேட்பாளர் வசந்தகுமாரையும், வாழ்த்தி கோஷம் போட்டனர்.

    பெயரை பயன்படுத்த கூடாது

    பெயரை பயன்படுத்த கூடாது

    அரசியல் நிலைப்பாடு தொடர்பாக, கருத்து தெரிவிக்காமல் நடிகர் விஜய் மௌனம் காத்து வருகின்றார். அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்த அரசியல் கட்சிகளுக்கு வேலை செய்யலாம் என்றும், ஆனால், மன்றத்தின் பெயரையும், கொடியையும், விஜய் பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விஜய் வாய்ஸ் யாருக்கு?

    விஜய் வாய்ஸ் யாருக்கு?

    எனவே, விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகிகள், கன்னியாகுமரி ரசிகர்களின் செயல்பாடு குறித்து விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் ரசிகர்களின் அரசியல் ஆர்வத்தை கவனித்து வரும் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பார் என்று தெரிகிறது.

    English summary
    When the actor Vijay will announce his support for the upcoming Lok Sabha election 2019 as his fans supporting Congress candidate Vasanthakumar in Kanyakumari constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X