சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் வழக்கு: பேரறிவாளனை சீக்கிரம் விடுதலை செய்யனும்.. நடிகர் விஜய்சேதுபதி

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து 2 ஆண்டுகளாகிறது. ஆனால் இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய உரிமங்களா? வைகோ கண்டனம்பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய உரிமங்களா? வைகோ கண்டனம்

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

இது தொடர்பான வழக்கில் ஆளுநரின் 2 ஆண்டுகால தாமதம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தது. மேலும் 7 தமிழரின் விடுதலையில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

சமூக வலைதளங்களில் கோரிக்கை

சமூக வலைதளங்களில் கோரிக்கை

இந்த நிலையில் 7 தமிழரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டும் வருகிறது. இதற்கான ஹேஷ்டேக்குகளும் உருவாக்கப்பட்டு ஷேர் செய்யபட்டு வருகின்றன. பல்வேறு துறைசார் பிரமுகர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி

இதேபோல் நடிகர் விஜய்சேதுபதியும் ஒரு வீடியோ பதிவில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அதில், எல்லோருக்கும் வணக்கம். நான் விஜய்சேதுபதி பேசுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை ஆளுநர் அவர்கள் விடுதலை செய்யனும்னு வேண்டி கேட்டுக்கிறேன்.

பேரறிவாளனை விடுதலை செய்யுங்க

அற்புதம் அம்மாள் அவர்களின் 29 வருட போராட்டம், ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுங்கன்னு வேண்டி கேட்கிறோம். தயவு செய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணா அவர்களை சீக்கிரமா விடுதலை பண்ணனும் நன்றி வணக்கம் என கூறியுள்ளார் விஜய்சேதுபதி.

English summary
Actor Vijaysethupathi has appealed to release Perarivalan in Rajiv Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X