சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாஸ், விஷால்.. என்ன சவுண்டு விட்டாலும் கவலையில்லை.. தில்லாக களம் கண்ட டிசி அரவிந்தன்

போலீஸ் அதிகாரி அரவிந்தனுடன் விஷால், கருணாஸ் வாதம் செய்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பூட்டை உடைக்க வந்த விஷால் மன்சூர் அலிகான் கைது- வீடியோ

    சென்னை: அன்று கருணாஸ் வள்ளுவர் கோட்டத்தில் வறுத்தெடுத்த போலீஸ் அதிகாரி அரவிந்தனைதான் இன்று விஷாலும் துளைத்தெடுத்திருக்கிறார். அன்று கருணாஸுக்குக் கிடைத்த அதே ட்ரீட்மென்ட் தற்போது விஷாலுக்கும் கிடைக்கவுள்ளது.

    "நான் யார் தெரியுமா? என்ன செய்து விடுவாய்? இந்த அதிகாரம் இருப்பதால் தானே இந்த ஆட்டம்?.. யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா... ஒத்தைக்கு ஒத்தை பார்த்துவிடலாம். தமிழில் படித்து ஐபிஎஸ் ஆன ஒரே காரணத்திற்காகத் தான் விட்டு வைத்திருக்கிறேன்.

    ஏக வசனம்

    ஏக வசனம்

    நம்ம தமிழ்க்காரன் என்று பார்த்தால், எங்கள் ஆட்களையே கையை உடை.. காலை உடை என்று உத்தரவு போடுகிறாய். எங்க ஆட்கள் கையை உடைத்தால், உன் கை, காலும் உடைக்கப்படும்" என்று ஏகவசனத்தில் கருணாஸ் பேசினது தற்போது தி.நகர் துணை ஆணையராக உள்ள அரவிந்தனைதான்.

    நாறி போய்விட்டது

    நாறி போய்விட்டது

    அதேபோல இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் உட்கட்சி சண்டை தெருவுக்கு வந்து நாறிப் போய் விட்டது. அப்போது, அடாவடியாக பூட்டை திறக்க மாட்டேன், உடைப்பேன் என்று எகிறிய விஷால் பின்னர் கடுமையாக வாதிட்டு தகராறு செய்ததும் இதே அரவிந்தனிடம்தான். தி.நகர் ராகவைய்யா சாலையில் லோகாம்பாள் தெருவில்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக அலுவலகம் உள்ளது.

    பொறுமையாக இருங்கள்

    பொறுமையாக இருங்கள்

    இதற்குதான் பூட்டு போட்டு மூடப்பட்டு பிரச்சனை ஆனது. தி.நகர் துணை ஆணையர் என்பதால் அரவிந்தன் இந்த விஷயத்தில் தலையிட வேண்டி வந்தது. பூட்டு போட்டது தொடர்பாக ஏற்கனவே போலீசார் விஷாலுக்கு அறிவுறுத்தியும் அவர் அந்த பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து தகராறு செய்யவும்தான், எங்கள் அதிகாரி வரட்டும், பொறுமையாக இருங்கள் என்று போலீசார் சொன்னார்கள்.

    காரசார வாதம்

    காரசார வாதம்

    அப்போதும் விஷால் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் போலீஸ் படையுடன் வந்தார் அரவிந்தன். ஆரம்பத்தில் பொறுமையாக பேச்சுவார்த்தைதான் நடத்தினார். "எதுவாக இருந்தாலும் என் அலுவலகத்துக்கு வாருங்கள் பேசி கொள்ளலாம். தெருவில் இப்படி திரண்டு நின்று பேசவேண்டாம். ஆனாலும் விஷால் கோபம் குறைவதாக இல்லை. விஷால் அரவிந்தனிடம் காரசாரமாக பேசினார். மேலும் மேலும் எகிறினார்.

    வேனில் ஏறி கொண்டார்

    வேனில் ஏறி கொண்டார்

    அப்போதுதான் ஒரு கட்டத்தில், தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டால் கைது செய்ய நேரிடும் என்று எச்சரித்தார் அரவிந்தன். அவ்வளவுதான் விஷால் அவராகவே ஆவேசமாக போய் போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அப்போது அவரை கைது செய்வதாக போலீஸ் அதிகாரி அறிவித்தார்.

    மரியாதை தரவில்லையோ?

    மரியாதை தரவில்லையோ?

    குறுகிய காலத்தில் ஒரே போலீஸ் அதிகாரியிடம் கருணாஸ், விஷால் என இரு நடிகர்கள் காரசாரமாக மோதியுள்ளனர். இதில் கருணாஸ் கல்யாண மண்டபத்திற்குள் உட்கார்ந்து சவுண்டு விட்டார். விஷால் தெருவில் வைத்து மோதி தற்போது கல்யாண மண்டபத்தில் போய் உட்கார்ந்துள்ளார். காரணங்களும், பின்னணிகளும் வேறு வேறாக இருப்பினும், ஒரு அதிகாரிக்கான மரியாதையை இருவரும் தர தவறினார்களோ என எண்ண தோன்றுகிறது.

    இருவருமே கைது

    இருவருமே கைது

    துணை ஆணையர் அரவிந்தன் கண்டிப்பு நிறைந்தவர், நேர்மையானவர் என கூறப்படுகிறது. தென்காசி டிஎஸ்பியாக இவர் சிறப்பாக பணியாற்றியவர். ஒரு அதிகாரி என்றும் பாராமல் இரு கருணாசும், விஷாலும் கண்டமேனிக்கு வாதம் செய்து, கடுமையாக விமர்சனம் செய்ததும், கடைசியில் இருவரையுமே அரவிந்தன்தான் கைது செய்ய நேர்ந்ததும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    English summary
    Actor Vishal tries to break open lock at Producers Council and arugued with T.Nagar Asst. Commisioner Aravindhan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X