• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

விஷால்.. 2019-இல் நிஜமாகவே திருமண மண்டபத்துக்கு போக போகிறார்! ஆனா தமிழ் பொண்ணு இல்லையாம்!

|

சென்னை: நடிகர் விஷால் கைதாகி திருமண மண்டபத்துக்கு போனதன் ராசியோ என்னவோ அவர் 2019-ஆம் ஆண்டு நிஜமாகவே திருமணம் ஆக போகிறதாம். அடடே ஆச்சரியக்குறி!

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவுடன் அவரை பார்த்து அடடே நம் வீட்டு பையன் போல் இருக்கிறாரே என அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்த ஒரு சில படங்கள் ஹிட் ஆகின.

படங்களை காட்டிலும் சில அதிரடி ஆக்ஷன்களால் அவர் பெரிதும் பேசப்பட்டார். பூஜை திரைப்படம் வெளியான போது எங்கெல்லாம் திருட்டு விசிடிக்கள் விற்பனை ஆனதோ அங்கெல்லாம் சென்று கடைக்காரர்களிடம் "உன் அனுமதியில்லாமல் உன் வீட்டுக்குள் வந்து நான் உட்கார்ந்தால் நீ சும்மா இருப்பியா" என கேட்டார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

பின்னர் இதற்கு மூல காரணமான தமிழ் ராக்கர்ஸிடமும் மோதினார். இறுதியில் விஷாலின் படத்தையே எச்டி பிரிண்ட்டாக வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், சரத்குமார்- ராதாரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் என பரபரப்பாக பேசப்பட்டார்.

வேட்புமனு

வேட்புமனு

இதைத் தொடர்ந்து ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போகிறேன் என்றார். இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். கடைசியில் அந்த வேட்புமனுவும் போலியாகிவிட்டது. விஷால் சமுஉ ஆக முடியாமல் போய்விட்டது.

 திருமண மண்டபம்

திருமண மண்டபம்

அண்மையில் நடிகர் விஷால் ரூ.7 கோடிக்கு கணக்கு காட்டவில்லை என சக தயாரிப்பாளர்கள் அலுவலகத்துக்கு பூட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து சினிமா பாணியில் பூட்டை உடைக்க விஷால் முற்பட்டார். அப்போது அவரை தி நகர் போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

விஷாலை விடுங்கள்

விஷாலை விடுங்கள்

இதனிடையே திருமண மண்டபத்துக்கு வெளியே விஷாலை விடுங்கள். போலீஸ் அராஜகம் என ஒரு கோஷ்டி கோஷம் போட்டு தொண்டை தண்ணீர் வற்ற கத்திக் கொண்டிருந்தனர். இதனால் விஷாலும் மிகவும் மனஉடைந்து போயிருப்பார் என்று பார்த்தால், தனது நண்பர் மீது தலை வைத்து கொண்டு கால் மேல் கால் போட்டு கொண்டு இளையராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

வரலட்சுமியுடன் காதல்

வரலட்சுமியுடன் காதல்

இதனிடையே விஷால், சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் காதல் இருப்பதாக கூறப்பட்டது. எனினும் இதை இருவரும் மறுத்தனர். இந்நிலையில் நடிகர் சங்க கட்டட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த மண்டபத்தில்தான் திருமணம் என ஒற்றை காலில் நிற்கும் விஷாலுக்கு பெண் பார்க்கும் படலங்கள் நடந்து கொண்டிருக்கிறதாம்

 ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம்

ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம்

விஷாலுக்கு ஆந்திரத்தைச் சேர்ந்த அனிஷா என்பவருடன் திருமணம் செய்யவுள்ளதாக அவரது தந்தை ஜிகே ரெட்டி தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். ஏதோ தமிழக திருமண மண்டபத்தில் விஷால் கைதான வேலை ஆந்திர பொண்ணாவது சிக்கியுள்ளது. ஆமா... தமிழகத்தில் அரசியல்வாதி ஆகணும், ஆனா பொண்ணு மட்டும் தமிழ் பொண்ணு வேண்டாம் என்றால் எப்படி பாஸ்?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

சென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
எஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841
தயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0
2009
தயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454
முகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0

 
 
 
English summary
Actor Vishal is going to marry a Andhra girl whose name is Anisha. His father confirmed this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more