சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகனை இழந்த நிலையிலும் மக்களை சிரிக்க வைத்த கலைஞன் விவேக்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விவேக்கின் 13 வயது மகன் காய்ச்சலால் இறந்த போதிலும் மக்களை சிரிக்க வைத்த கலைஞன் விவேக்.

Recommended Video

    மகனை இழந்த நிலையிலும் கூட மக்களை சிரிக்க வைத்தவர் Vivek | Oneindia Tamil

    நடிகர் விவேக் சின்ன கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என ரசிகர்களால் அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர். கடந்த 30 ஆண்டுகளாக தனது தனிப்பட்ட காமெடி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

    கொரோனா தடுப்பூசி போட்ட பின் விவேக் சுயநினைவு இழந்தாரா? அரசு தெளிவுபடுத்த திருமாவளவன் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசி போட்ட பின் விவேக் சுயநினைவு இழந்தாரா? அரசு தெளிவுபடுத்த திருமாவளவன் வலியுறுத்தல்

    மூடநம்பிக்கையை தனது நகைச்சுவை மூலம் தக்ர்த்தெறிந்தவர் விவேக். இவர் நேற்றைய தினம் அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலையில் சென்னையில் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதயத்தில் அடைப்பு

    இதயத்தில் அடைப்பு

    அவருக்கு 100 சதவீதம் இதயத்தில் அடைப்பு இருந்ததை அடுத்து அவருக்கு எக்மோ கருவி கொடுக்கப்பட்டது. அவர் அபாய கட்டத்தில் இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. எதையும் 24 மணி நேரம் போனால்தான் சொல்ல முடியும் என்றார்கள்.

    13 வயது மகன்

    13 வயது மகன்

    இந்த நிலையில் இன்று அதிகாலை விவேக் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரது உடலுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விவேக்கின் 13 வயது மகன் காய்ச்சலால் உயிரிழந்த நிலையிலும் மக்களை சிரித்த வைத்த கலைஞன் விவேக்.

    40 நாட்கள்

    40 நாட்கள்

    சென்னை கே கே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தவர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் 40 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மரம் நடும் பணி

    மரம் நடும் பணி

    இந்த நிலையில் பிரசன்னகுமாரின் உடல்நிலை மோசமடைந்து அவர் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து விவேக் தனது மகன் நினைவாக சாய் பிரசன்னா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி மரங்களை நடும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    உதவி

    உதவி

    புத்திர சோகம் கொடியது என்ற போதிலும் தான் அழுதாலும் மக்களை சிரிக்க வைத்தவர் விவேக். நடிகர் என்பதை காட்டிலும் அவர் நிறைய பேருக்கு உதவிகளை செய்ததாக அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்ட கலைஞன் இயற்கையோடு இயற்கையாக கலந்து விட்டாரே!

    English summary
    Actor Vivek had done his good job even after he missed his 13 years old son in 2015.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X