• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"

|

சென்னை: 6 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தனது இறப்பிலும் விவேக் ஏற்படுத்தியுள்ளார்.

  சமுக சேவைக்காக தன்னை அர்ப்பணித்தவர் Vivek Sarathkumar, Premalatha இறுதி அஞ்சலி | RIP Vivek

  நடிகர் விவேக் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் படிப்பை படித்திருந்தார். இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வென்றார்.

  சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல் சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல்

  பின்னர் தலைமை செயலகத்தில் அரசு ஊழியராக தனது பணியை தொடங்கினார். நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக நேரம் கிடைத்த போதெல்லாம் மெட்ராஜ் ஹூயுமர் கிளப்பில் இணைந்து பணியாற்றினார்.

  முழு நேர சினிமா

  முழு நேர சினிமா

  இதையடுத்து அவருக்கு மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் நடிக்க இயக்குநர் பாலச்சந்தர் வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் வரத்தொடங்கியதும் தனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர சினிமாவில் இறங்கிவிட்டார்.

  கவுண்டமணி

  கவுண்டமணி

  செந்தில், கவுண்டமணி, வடிவேல் என அடுத்தடுத்து காமெடிகளில் கலக்கிக் கொண்டிருந்த வேளையில் தனக்கென ஒரு டிரென்ட்டை உருவாக்கிக் கொண்டார். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டி யார் மனதையும் புண்படுத்தாமல் தனது நகைச்சுவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

  சமூக அவலம்

  சமூக அவலம்

  மரங்களை நடுதல், சமூக அவலங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பது, டெங்கு காய்ச்சலின் போது விழிப்புணர்வை ஏற்படுத்தியது, பிளாஸ்டிக்கிற்கு எதிராக குரல் கொடுத்தது என அவரது விழிப்புணர்வுகளும் சமூக பொறுப்புகளும் நீண்டுக் கொண்டே போகிறது. அந்த வகையில் இறப்பதற்கு முன்னர் கொரோனா தடுப்பூசி குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

  விழிப்புணர்வு

  விழிப்புணர்வு

  அது போல் அவரது இறப்பிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது. விவேக் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது போல் இது அவருக்கு முதல் அட்டாக் ஆகும். மாரடைப்பு என்பது ஒரே நாளில் வந்துவிடாது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  விழிப்புணர்வு

  விழிப்புணர்வு

  அதாவது தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு வந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு பதில் அளித்திருந்தார். 35 வயதுக்குள் மேற்பட்டவர்கள் கட்டாயம் 6 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்.

  6 மாதங்கள்

  6 மாதங்கள்

  இப்போதெல்லாம் வியாதி என வந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அது சில நேரங்களில் முற்றி, உயிருக்கே உலை வைக்கிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தினால், அதை யாரும் கேட்பதில்லை.

  ஆரம்ப கட்டம்

  ஆரம்ப கட்டம்

  விவேக் தனது வீட்டையும், நாட்டையும் கவனித்து கொண்ட நிலையில் எல்லா விவரங்களும் அறிந்திருந்தும் தனது உடலை அவர் கவனித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார் என்றே தெரிகிறது. இதே விவேக் மட்டும் தனது உடல்நலனிற்காக தனி கவனம் செலுத்தி மருத்துவ பரிசோதனை செய்திருந்தால் அவருக்கு இதயத்தில் 100 சதவீதம் அடைப்பு இருந்தது முன் கூட்டியே அதாவது ஆரம்பக் கட்டத்திலேயே தெரிந்திருக்கும். அவரும் சிகிச்சை எடுத்திருக்கலாம்.

  விழிப்புணர்வு

  விழிப்புணர்வு

  ஆனால் இன்று எல்லாம் கைமீறி போய்விட்டது. அவரும் இயற்கையோடு இயற்கையாக கலந்துவிட்டார். எனவே பொது நலனில் அக்கறை உள்ளவர்கள் தன்னை போல் இல்லாமல் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விவேக் தனது இறப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்றே கருதப்படுகிறது.

  English summary
  Actor Vivek has given awareness in his demise also.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X