சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களை சைட் அடிக்க.. விடுமுறைக்காக மாணவர்கள் போராடுறாங்க.. ஒய்.ஜி.மகேந்திரன் ஷாக் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: பெண்களை சைட் அடிக்கவும், விடுமுறைக்காவும் பெரும்பான்மையான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது. மாணவர்கள் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து நடிகர் ஒய்ஜி மகேந்திரன் பேசியது ச்ர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் போராட்டம்

தமிழகத்தில் போராட்டம்

சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நடைபெற்ற விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில் தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று நடத்திக் கொண்டிருப்பதாக விமர்சத்தார்.

பல்பொடி சரியில்லை

பல்பொடி சரியில்லை

பல்பொடி சரி இல்லை என்றால் கூட போராட்டம் நடத்துவதாகவும் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களை நடத்தியே வள்ளுவரை சாகடிக்கின்றனர் என்றும் விமர்சித்தார்.

25 சதவீத மாணவர்கள்

25 சதவீத மாணவர்கள்

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 25% பேர் போராட்டம் குறித்த அறிவுடன் போராடுகிறார்கள் என்றும் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் பள்ளி விழாவில் பேசினார்

சைட் அடிக்க

சைட் அடிக்க

மீதமுள்ள 75% பேர் விடுமுறை கிடைக்கும் என்றும், கலாட்டா செய்யவும் தான் போராடுகிறார்கள் என்றும் பெண்களை சைட் அடிப்பதற்காகவும் போராட்டத்திற்கு செல்கின்றார்கள் என்றும் ஒய்ஜி மகேந்திரன் விமர்சித்தார்.

போராட்டம் வேண்டாம்

போராட்டம் வேண்டாம்

படிக்கும் மாணவர்களுக்கு போராட்டம் தேவை இல்லாதது என்று கூறிய ஒய்ஜி மகேந்திரன், மாணரகள் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வன்முறை வேண்டாம்

வன்முறை வேண்டாம்

ஏதாவது குறைகள் இருந்தால் அதை நியாயமான முறையில் கேட்க வேண்டும் என்று கூறிய அவர், கல் எறிவது, பேருந்துகளை எரிப்பது, கலவரம் செய்வது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது என இருக்கக் கூடாது என்றும் ஒய்ஜி மகேந்திரன் வலியுறுத்தினார்.

English summary
Actor YG Magendran comments about Students Protest against citizenship amendment act.. he says Students struggle for the holidays
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X