சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலங்காத்தால கஸ்தூரிக்கு வந்த டவுட்டை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: பொழுது விடிஞ்சதும் கஸ்தூரிக்கு ஒரு டவுட் வந்துள்ளது. இந்த டவுட்டை தீர்ப்பதற்காக ஏராளமான நெட்டிசன்கள் மும்முரமாகி உள்ளனர்.

சமூகத்தை பாதிக்கக்கூடிய எந்த விவகாரமாக இருந்தாலும் சரி, அல்லது பொதுநலன் சார்ந்த கருத்துக்களாக இருந்தாலும் சரி உடனுக்குடன் வந்து தனது கருத்தை பதிவிட்டு விடுவார் நடிகை கஸ்தூரி.

 Actrerss Kasturis doubt in Tamil Words

பல சமயங்களில் இவரது ட்வீட்டுகளுக்கு நிறைய வரவேற்பு கிடைக்கும் என்றாலும் சில சமயங்களில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டு விடுவார்.

இந்நிலையில், இன்று காலை திடீரென ஒரு ட்வீட் போட்டார். யாரையும் விமர்சிக்கவில்லை, திட்டவில்லை, கருத்து சொல்லவில்லை.. ஆனால் தமிழறிஞர்களுக்கு ஒரு வினா என்று ட்வீட் போட்டு தனது சந்தேகத்தை கேட்டிருக்கிறார்.

அதில், "தமிழறிஞர்களுக்கு ஒரு வினா: கண்ணீரும் கம்பலையும் என்கிறார்களே, கம்பலை என்றால் என்ன? கந்தக்கோளம் என்ற சொல்லின் ஆரம்பமும் அர்த்தமும் யாது? சங்க இலக்கியம்லாம் கேட்கல, சாதா வார்த்தைக்கே அர்த்தம் தெரியலையே ! தெரிஞ்சவங்க விளக்கி உதவுங்க, தெரியலைன்னா FWD பண்ணுங்க Plz" என்று பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரியின் சந்தேகத்தை நிறைய பேர் தங்களால் முடிந்த அளவு தீர்த்து வைக்க ஆரம்பித்தனர். ஒருவர் "கண்புலை என்பது மருவியே பேச்சு வழக்கில் கம்பலை ஆனது" என்று நீண்ட விளக்கம் அளிக்கவும், "நல்ல விளக்கம் ! தீர்ந்தது என் சந்தேகம். புலவரே, பரிசு உங்களுக்கே !!!!" என்று ட்வீட்டில் பதில் அளித்துள்ளார்.

கஸ்தூரி டவுட் தீர்ந்தது சரி.. இப்படி ஒரு கேள்வியை கஸ்தூரி ஏன் காலங்காத்தால கேட்டார் என்பதே நமது டவுட்!

English summary
Actress Kasturi has raised doubt in tweet about Tamil Wordings Kambalai and Kanthakkolam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X