• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

Actress Aiwarya Rajesh: அவர் அப்படி ஒன்றும் அழகில்லை...!

|

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ்.. இவர் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஒரு பெண் என்றாலும், சென்னையில் பிறந்து வளர்ந்து ,படிப்பும் இங்கேயே என்பதால், அக்மார்க் தமிழ் பெண் போல பேசுகிறார்.

இவருக்கு டான்ஸ் மீதுதான் ஈர்ப்பு இருந்தது. கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம்தான் மக்களுக்கு இவர் அறிமுகம் ஆனார். டான்ஸுன்னு இறங்கிட்டார்னா எங்க வீட்டு உங்க வீட்டு ஆட்டம் இல்லைங்க மெகா மெகா ஆட்டம்தான்.

என்னவோ தெரியலை இவருக்கு ரவுடி பேபி பாடல் பிரபு தேவா மாஸ்டர் மாதிரி, ஒரு பாடலும், பிரபு தேவா மாஸ்டரும் இதுவரை அமையவில்லை.

Roja Serial: என்ன குலமோ... என்ன கோத்திரமோ.. அர்ஜுன் இருக்கும்போது சொல்லலாமா?

சீரியல் பக்கம்

சீரியல் பக்கம்

மானாட மயிலாட டைட்டில் வின் செய்ததற்குப் பிறகு , எல்லாரையும் போல சினிமா வாய்ப்புக்கு காத்து இருந்திருக்கிறார். அதற்குள் சீரியலில் நடிக்க வாய்ப்புக்கள் வந்துகொண்டே இருந்ததாம். ஆனால், இவருக்கு அதில் இஷ்டம் இல்லை.ஒரு கட்டத்தில் வீட்டில் எல்லாரும் பிசியா இருக்க கடுப்பாகி, இனி சீரியயல் வாய்ப்பு வந்தால், அப்படியே நடிச்சுக்கிட்டு காலத்தை கழிச்சுடலாம்னு முடிவு எடுத்து இருக்கார்..

புரட்டிய அட்டகத்தி

புரட்டிய அட்டகத்தி

அப்போதுதான் இயக்குநர் பா.ரஞ்சித் கூப்பிட்டு இருக்கார். சரி போய்த்தான் பார்க்கலாமே என்று போனபோதுதான் இவரது வாழ்க்கையை புரட்டிப் போடுகிற மாதிரி அட்டகத்தி படத்தில் நடிக்க இவருக்கு அருமையான வாய்ப்பு. வேணாம்னு சொல்லுவாரா, இல்லை சொல்லுகிற மாதிரிதான் மன நிலையா? எவ்ளோ பெரிசா தலையை ஆட்ட முடியுமோ அப்படி ஆட்டி இருக்கார்.

பட்டு பட்டுன்னு படங்கள்

பட்டு பட்டுன்னு படங்கள்

அட்டக்கத்தி படம் ஹிட் ஆனதில் பட்டு பட்டுன்னு படங்கள் அமைஞ்சு இப்போ பார்த்தால், அவர் அப்படி ஒன்றும் அழைகில்லை என்று பாடும் அளவுக்கு இருந்தவர், இப்போ என்னமா தன்னைத் தானே மெருகேற்றி அழகில் ஆகட்டும், திறமையில் ஆகட்டும் பளிச்சென மின்னுகிறார். மணிரத்னம் பிடம் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கும்போது போட்டோ ஷூட் கொடுத்திருந்தார் ஐயோ...நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இதுன்னு கேட்குமளவுக்கு ஹை லெவல்!

எங்க ஊர் பொண்ணு

எங்க ஊர் பொண்ணு

கனா.. இந்த படத்தை பத்தி சொல்லனும் என்றால் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வளவு கடுமையா உழைச்சசு இருக்கார்னு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் சொன்னார்.. ஆனால், படத்தைப் பார்த்தால், நூத்துக்கு நூறு நிஜம்ங்க.அருண் ராஜாகாமராஜ் பேசுகையில், எனக்கு கிராமத்து பொண்ணு, கிரிக்கெட் விளையாடுதுன்னு கதை நினைச்சப்பவே, மைண்ட்ல ஐஸ்வர்யா ராஜேஷ்தான் வந்தாங்க.

அருண் நான் நோ

அருண் நான் நோ

உன் இஷ்டம் காமராஜ்..நான் இதுல எதுக்கும் நோ சொல்லமாட்டேன்.உனக்கு நம்பிக்கை இருக்குதுல்ல புகுந்து விளையாடுன்னு சொன்னார். படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.எங்க ஊர் கிராமத்து பொண்ணு, நான் மும்பையில் இருந்து அழைச்சுட்டு வந்து வெள்ளை வெளேர்னு ஒரு பொண்ணை இதுதான்னு மக்களை நம்ப வச்சு ஏமாத்த எனக்கு விருப்பம் இல்லை. எங்க ஊரு பொண்ணு மாதிரி வேணும்னு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை கேட்டேன்.

இரண்டு நாளில்

இரண்டு நாளில்

முதலில் பயந்தாங்க... ரெண்டாவது நாள் பிராக்டிசில் பந்து ரெண்டு அடியில்தான் விழுந்துச்சு. ஆனால், அவங்க பந்து போட்ட விதமும், பேட்டிங் செய்ததும் எனக்கு நம்பிக்கை வந்துருச்சு.கனா படத்துக்கு இவர்தான்னு முடிவு பண்ணினேன். மே மாச வெயிலில் முகம் சுளிக்காம பிராக்டிஸ் பண்ணுவாங்கன்னு அருண் சொன்னார்.

அழகு இதில்?

அழகு இதில்?

ஒரு படத்துல வடிவேல் ஒரு குடிகாரன்கிட்டே மாட்டிக்குவார்.இசை எதுல இருக்குன்னு கேட்க, அதுலருக்கு, இதுல இருக்குன்னு செம அடி வாங்கி வடிவேலுக்கு இசை எதிலெல்லாம் இருக்குன்னு புரிய வைப்பார். அது மாதிரிதாங்க.. ஐஸ்வர்யா ராஜேஷ் அழகு அவர் நிறத்திலிருக்குதுன்னா நம்பிவீங்களா?. அவரது விடா முயற்சி, தன்னம்பிக்கையில் இ ருக்கிறதது என்றால் நம்புவீர்களா?

நடந்தது ஒன்று

நடந்தது ஒன்று

ஆனா; நம்ப வச்சுட்டாங்களே ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தி படம் வரைக்கும் போயிட்டு வந்துட்டாங்க..தெலுங்கில் பிசி..உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆசை இருந்தாலும் கால்ஷீட் இல்லை. இவங்க நினைச்சது சீரியலில் வாய்ப்பு கிடைச்சால் அப்படியே ஒதுங்கிடலாம் என்று... ஆனால் நடந்தது என்ன? தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எதுவும் வசப்படும்!

 
 
 
English summary
After winning the title of Manada Peacock Title, he has been waiting for a cinema opportunity like everyone else. The chances of acting in the serial. But, he does not like it.Acting like that and after spending time ..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X