• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சர்ச், மசூதியையும் சேர்த்து பேசியிருக்கணும்.. ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை.. சொல்கிறார் காயத்ரி

|

சென்னை: "திமுக, திக, நாம் தமிழர், விசிக கட்சிகளின் கைக்கூலிகள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர்.. இந்துக்கள் என்னவோ, சமத்துவத்திற்கு தயாராகத்தான் உள்ளனர். மற்ற மதம் சமத்துவத்திற்கு தயாரா? ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை... அவர் பேசும்போது சர்ச், மசூதியை உள்ளடக்கியிருக்க வேண்டும்... திமுகவும் மற்ற பயனற்ற கட்சிகளும் பிற மதத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்" என்று பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் கண்டன ட்வீட் பதிவிட்டுள்ளார்.

  சர்ச், மசூதியை சொல்லுங்களேன்.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஜோதிகா

  சில தினங்களுக்கு முன்பு ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் பேசும்போது, "கோயிலுக்காக நிறைய காசு கொடுக்கிறீங்க.. பெயிண்ட அடித்து பராமரிக்கிறீர்கள்.

  தயவு செய்து அதே தொகையை ஸ்கூல்களுக்கும் கொடுங்கள்... ஆஸ்பத்திரிகளுக்கும் கொடுங்கள்... ஆஸ்பத்திரிகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம்... அதனால் அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்" என்றார்.

  ஜோதிகா

  ஜோதிகா

  ஜோதிகா இதை பேசி நாட்கள் ஆனாலும் இதன் சர்ச்சைகளும், விமர்சனங்களும் இன்னும் குறையவே இல்லை.. ஜோதிகா பேசும்போது, தமிழர்களுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் பேசவில்லை.. உண்டியலில் போடும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பயன்படும் ஆஸ்பத்திரிக்கும், ஸ்கூலுக்கும் செலவிடுங்கள் என்பதுதான் அவர் சொல்ல வந்த கருத்தே தவிர, கோயில்களில் பணத்தை போடவே கூடாது என்று சொல்லவில்லை.

  கண்டனங்கள்

  கண்டனங்கள்

  குறிப்பாக தஞ்சை கோயிலை பற்றி அவதூறாக, அவமரியாதையாக பேசவே இல்லை என்பதே நிதர்சனம். எனினும் ஒருசாரார் ஜோதிகா பேச்சினால் மனம் புண்பட்டுள்ளனர்.. எஸ்வி சேகர் முதல் பல பாஜக ஆதரவாளர்கள் தங்கள் கண்டனங்களை கடுமையாகவே ஜோதிகாவுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காயத்ரி ரகுராமும் ஒரு ட்வீட் போட்டுள்ளர். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:

  காயத்ரி ரகுராம்

  காயத்ரி ரகுராம்

  "நடிகர்களுக்கு கோயில் கட்டும் கும்பலுக்கு அவ்வளவு தான் அறிவு... நடிகர்களுக்காக கோயில்களை கட்டியவர்கள் எப்பவுமே சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் மூளை அப்படி... திமுக, திக, நாம் தமிழர், விசிக கட்சிகளின் கைக்கூலிகள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர்... ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துபவர்கள் வெட்கக்கேடானவர்கள்.. இதற்கு நடிகை ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்கள் என்னவோ, சமத்துவத்திற்கு தயாராகத்தான் உள்ளனர்.

  குவியும் கமெண்ட்கள்

  குவியும் கமெண்ட்கள்

  மற்ற மதம் சமத்துவத்திற்கு தயாரா? ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை... அவர் பேசும்போது சர்ச், மசூதியை உள்ளடக்கியிருக்க வேண்டும்... திமுகவும் மற்ற பயனற்ற கட்சிகளும் பிற மதத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்' என்று பதிவிட்டுள்ளார். பொதுவாக, காயத்ரி ரகுராம் பதிவு என்றால் விசிக-வைதான் வம்பிழுத்து வீட்களை போடுவார்.. அதற்கு சிறுத்தைகளும் கொந்தளித்து கமெண்ட் போடுவார்கள்.. இப்போது திமுக, திக, நாம் தமிழர், விசிக கட்சிகளை இழுத்து கொண்டு வந்து சீண்டிவிடவும், மொத்த பேரும் திரண்டு வந்து திட்டி கொண்டிருக்கிறார்கள்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  actress and bjp politician gayathri raguram slams jyodhika
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more