• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"கள்ளத்தொடர்பு".. நெருங்கி பழகி குடும்பத்தை பிரித்த.. சாந்தினி மீது வழக்கு பதிய கோரிக்கை.. பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்களின் நட்பை தேடி சென்று ஏற்படுத்துபவர்கள் சில நடிகைகள்தான்.. நல்லா இருக்கிற குடும்பத்தினரைப் பிரித்து மிரட்டி பணம் பறிக்கும் செயல், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகிறது... அந்த வகையில் மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது புகார் சொன்ன சாந்தினியை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாஜி அமைச்சர் மணிகண்டனால் 3 முறை கருவுற்றேன்.. மூன்று முறையும் வலுக்கட்டாயமாக அபார்ஷன் செய்ய வைத்தார். அபார்ஷனுக்கு பிறகு, காப்பர்-டியை போட வலியுறுத்தினார்.. திருமணம் செய்யாமல் ஏமாற்றினார்.. கொலை மிரட்டல் விடுக்கிறார்" என்று துணை நடிகை சாந்தினி புகார் தந்திருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமா ஊசி போடுங்க.. ஏன் தெரியுமா.. பாஜக முதல்வர் சொன்ன ஐடியா.. அப்படியே மிரண்டு போன மக்கள்கொஞ்சம் கொஞ்சமா ஊசி போடுங்க.. ஏன் தெரியுமா.. பாஜக முதல்வர் சொன்ன ஐடியா.. அப்படியே மிரண்டு போன மக்கள்

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நடிகை சாந்தினி மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புகார்

புகார்

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.. அதில், "முன்னாள் அமைச்சர் திரு. மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வரவேற்கிறது. அதே நேரம், நடிகை சாந்தினி மீது, தமிழ்நாடு அரசு தானாக முன் வந்து, வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதை நன்கு அறிந்தும், அவருடன் நெருங்கிப் பழகி, மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

 கூட்டு சதி

கூட்டு சதி

இவர் ஒரு குடும்பத்தைப் பிரிக்க, திட்டமிட்டு கூட்டு சதி செய்ததும், பின்னர் அதைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததும் தெரிய வருகிறது. எனவே அவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது போன்ற தொடர்புகளால் தமிழ்நாட்டில் ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல குழந்தைகள், சமூக இழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டு அநாதைகள் ஆகிறார்கள்.

  திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி Manikandan துன்புறுத்தினார் .. குமுறிய Shantini Deva
   கள்ள தொடர்பு

  கள்ள தொடர்பு

  இதன் காரணமாக, இது போன்ற தொடர்பில் ஈடுபடும் ஆண் - பெண் இருவருக்கும் கடுமையான - சமமான தண்டனை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் இந்திய தண்டனை சட்டம் 497 ( கள்ளத்தொடர்பு) உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இது திருமணத்தை மீறிய தொடர்பு தவறில்லை என பொதுமக்கள் தவறாக எண்ணும்படி செய்துவிட்டது. உண்மையிலேயே உச்சநீதிமன்றம், ஆங்கிலேய காலத்து பழமையான சட்டப்பிரிவு 497ஐ ரத்து செய்துவிட்டு இந்த காலச் சூழலுக்கு ஏற்றவாறு, புதிதாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தியது. அது நடைமுறைக்கு வரவில்லை.

  நட்பு

  நட்பு

  இந்த சூழ்நிலையில், நடிகைகளாக, பாடகிகளாக, கவிஞர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் சில பெண்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களின் நட்பை தேடிச்சென்று ஏற்படுத்திக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழும் அந்தக் குடும்பத்தினரைப் பிரித்து மிரட்டி பணம் பறிக்கும் செயல், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகிறது.

   தண்டனை

  தண்டனை

  எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு காலம் தாமதிக்காமல் இதுபோன்ற தொடர்பில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான தண்டனை தரும் வகையில் உரிய அவசர சட்டம் இயற்ற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  English summary
  Actress Chandini and Ex Minister Manikandan case issue
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X