• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடுத்தடுத்து அபார்ஷன்.. "காப்பர்-டி" போடவைத்த மணிகண்டன்.. உடந்தையாக இருந்த பரணி.. அவரும் சிக்குவாரா?

Google Oneindia Tamil News

சென்னை: மணிகண்டனால் 3 முறை கருவுற்றேன்.. மூன்று முறையும் வலுக்கட்டாயமாக அபார்ஷன் செய்ய வைத்தார். அபார்ஷனுக்கு பிறகு, காப்பர்-டியை போட வலியுறுத்தினார்.. குளிக்கும்போது, எனக்கே தெரியாமல் டிரஸ் இல்லாத ஒரு போட்டோவை டெலிகிராம் மூலம் அனுப்பி வைத்து மிரட்டுகிறார்" என்று துணை நடிகை சாந்தினி புகார் அடையாறு மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும் மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.. இதையடுத்து, பரணி என்பவரையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி Manikandan துன்புறுத்தினார் .. குமுறிய Shantini Deva

  கடந்த 3 நாட்களுக்கு முன்பு, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது, துணை நடிகை சாந்தினி என்பவர் சென்னை கமிஷனர் ஆபீசில் பாலியல் புகார் தந்திருந்தார்..

  "மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு என்னை முறைப்படி திருமணம் செய்வதாக மணிகண்டன் சொன்னார்.. அதை நம்பி அவருடன் வாழ ஆரம்பித்தேன்..

  சாந்தினியா.. அந்த பொண்ணு யாரென்றே எனக்கு தெரியாது.. பணம் பறிக்கும் கும்பல் போல!.. மணிகண்டன் மறுப்புசாந்தினியா.. அந்த பொண்ணு யாரென்றே எனக்கு தெரியாது.. பணம் பறிக்கும் கும்பல் போல!.. மணிகண்டன் மறுப்பு

  கொலை

  கொலை

  என் வீட்டிற்கு அவர் வந்து தங்கி சென்றதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது... அவரால் நான் 3 முறை கருவுற்றேன்.. கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்ய வைத்தார். இப்போது கல்யாணம் செய்ய வற்புறுத்தியதால், கொலை மிரட்டல் விடுக்கிறார்.. அடித்து துன்புறுத்தினார்.." என்று சாந்தினி தெரிவித்திருந்தார்.

  பணம்

  பணம்

  இதனால் சினிமா மற்றும் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பானது. ஆனால், மணிகண்டன் இந்த புகாரை அப்போதே மறுத்திருந்தார்.. "சாந்தினியா, அந்த பெண் யாரென்றே தெரியாது.. போட்டோக்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என்று ஒரு கும்பல் மிரட்டியது.. முதலில் 3 கோடி கேட்டார்கள், அப்பறம் 2 கோடி, 30 லட்சம் என பேரம் பேசினார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

  சாந்தினி

  சாந்தினி

  ஆனாலும், சாஸ்திரி நகர் போலீசிலும் சாந்தினி புகார் தந்திருந்தார்.. அதனடிப்படையில், மணிகண்டன் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைதவிர, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன... சாந்தினி அளித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  அடையாறு

  அடையாறு

  இந்த நிலையில், அடையாறு மகளிர் போலீசிலும் நடிகை சாந்தினி நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.. அத்துடன், மணிகண்டன் தன்னை ஏமாற்றியது தொடர்பாக பரபரப்பான வாக்குமூலமும் அளித்துள்ளார்.. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்படும் என்றும், அவரை நேரில் வரவழைத்து விரைவில் விசாரணை நடத்துவோம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

  புகார்

  புகார்

  அதுமட்டுமல்லாமல், அமைச்சர் மணிகண்டனின் இந்த நடவடிக்கைகளுக்கு பரணி என்பவரும் உடந்தையாக உள்ளார். எனவே 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை சாந்தினி சொல்லி இருந்தார். சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் 2017ல் வேலை செய்து வந்தபோதுதான் பரணி என்பவர் மூலமாக, மணிகண்டனுடன் சாந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டதாம்..

   பரணி?

  பரணி?

  எனவே, பரணியையும் நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்... அவர் அளிக்கும் தகவல்களையும் இந்த வழக்கில் போலீசார் முக்கிய ஆதாரங்களாக சேர்க்க உள்ளதாக தெரிகிறது.எனினும், மாஜி அமைச்சர் மீது எப்படி இவ்வளவு விரைவாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற சந்தேகமும் எழுந்து கொண்டே இருக்கிறது..

  ஆலோசனை

  ஆலோசனை

  சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான், இந்த வழக்குப்பதிவு நடந்துள்ளதாம்.. அதுவுமில்லாமல், பாலியல் குற்றச்சாட்டு மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளதாலேயே, முறையான விசாரணைகளும் விரைவில் கையில் எடுக்கப்படும் என்கிறார்கள்.. மாஜியின் மீதான புகார், வழக்கு பதிவு, போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  English summary
  Actress Chandini confessed to the Police on Ex Minister Manikandan
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X