India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"விபச்சாரம்" + போதை + பணம்.. 4 பேரையும் புட்டு புட்டு வைத்த "நடிகை".. போலீசில் பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

சென்னை: போதைப்பொருள், பாலியல் தொழில், பணமோசடி உள்ளிட்ட புகார்களை சொல்லி தன்னை ஒரு கும்பல் மிரட்டுவதாக, நடிகை தந்த புகார் மனுவானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையை சேர்ந்தவர் அந்த துணை நடிகை.. மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர்.. 20 வயதாகிறது.. பாக்யராஜ் இயக்கிய உலக சாதனை 369, அகத்தியன் குறும்படம், மற்றும் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

தன்னை பாலியல் தொழில் செய்ய சொல்லி ஒரு கும்பல் டார்ச்சர் தருவதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை இவர் தந்திருந்தார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் போக்சோவில் கைது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் போக்சோவில் கைது

 கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

அந்த புகாரில் உள்ளதாவது: சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய பெற்றோருடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.. அதனால், வீட்டை விட்டு வெளியேறிவந்துவிட்டேன்.. எனது தோழி மூலம் சினேகா என்பவர் அறிமுகமானார்.. அவரது வீடு ராமாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ளது.. அங்கு சில காலம் வசித்து வந்தேன்.. அப்போதுதான் சினேகாவின் நண்பர்கள் பிரகாஷ், ரியா, நந்தினி ஆகிய மூன்று பேர் எனக்கு அறிமுகமானார்.

 ஸ்நேகா டார்ச்சர்

ஸ்நேகா டார்ச்சர்


பிரகாஷ், ரியா, நந்தினி ஆகியோர் சினேகா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள்.. அவர்கள் அங்கு மது அருந்துவதும், போதை பொருட்களை பயன்படுத்துவதும் பின்னர்தான் தெரிய வந்தது.. இதனால் அங்கிருந்து வெளியேறலாம் என முடிவு செய்த நிலையில், சினேகா தனக்கு யாரும் இல்லை என என்னிடம் நம்பும் வகையில் பேசி அங்கேயே தங்க வைத்துவிட்டார்.. ஒருநாள், போதைப்பொருள் உட்கொண்டு அதிக மயக்கத்தில் இருந்த சினேகா நீண்ட நேரம் அழுது கொண்டிருந்ததால் அவரிடம் விசாரித்தேன்..

 போதைக்கு அடிமை

போதைக்கு அடிமை

அப்போது தன்னால் போதைப் பொருள் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை, அதற்கு அடிமையாகி விட்டதாக சொன்னார். மேலும் தானும் ரியா, நந்தினி, பிரகாஷ் ஆகிய 4 பேரும் பாலியல் தொழில் செய்து தான் பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் என அஞ்சி வெளியேற முடிவு செய்தேன். இதைக் கேட்டதும் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். எனவே அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென எனது நண்பர் ஒருவர் மூலம் வெளியேற அறையில் இருந்த பொருட்களை காலி செய்த பொழுது சினேகா என்னை தடுத்தார்.

 ரகசியம்

ரகசியம்

மேலும் தங்கள் ரகசியம் அனைத்தையும் தெரிந்து கொண்டதால் தங்களை வெளியில் சென்று காட்டிக்கொடுத்து விடுவேன் என்கிற அச்சத்தில் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதையடுத்து 30 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அந்த அறையை விட்டு வெளியேறினேன். திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் எனக்கு போன் செய்து பாலியல் தொழிலுக்கு என்னையும் அழைப்பதோடு அவ்வாறு வர மறுத்தால் என் மீதும் எனக்கு உதவிய நண்பர்கள் மீது பண மோசடி புகார் மற்றும் பாலியல் தொழில் புகார் அளிப்போம் என மிரட்டுகின்றனர்.

பாலியல்

பாலியல்

திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் என்னிடம் திரைத்துறையில் இனிமேல் பணியாற்ற முடியாதவாறு செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள். எனவே தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தன்னை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து போலீசார் மேற்கண்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளதாக தெரிகிறது.

English summary
actress complaint in chennai commissioner office for sexual torture
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X