சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விசிகவினர் என்னை கேவலமாக திட்டினர்.. மத வெறி தூண்ட கூடாது.. காயத்ரி மீண்டும் கட் அன்ட் ரைட் பேச்சு!

Google Oneindia Tamil News

Recommended Video

    மத வெறி தூண்ட கூடாது.. காயத்ரி மீண்டும் கட் அன்ட் ரைட் பேச்சு!

    சென்னை: "எத்தனையோ பேர் எதிர்த்து பேசினார்கள்.. ஆனால் என்னை மட்டும் கேவலமாக விசிகவினர் திட்டினார்கள். இனி இவர்கள் எந்த பெண்ணையும், தப்பாக பேசக்கூடாது. ஜாதி வெறி, மதவெறி தூண்டக்கூடாது" என்று விடுதலை சிறுத்தைகளுக்கு நடிகை காயத்ரி ரகுராம் எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக திரும்பவும் கூறியுள்ளார்.

    "சனாதன கல்வியை வேரறுப்போம்" என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, "கூம்பு வடிவில் இருந்தால் அது மசூதி, அதிக நீளம் கொண்டிருந்தால் அது தேவாலயம், அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    திருமாவளவனின் இந்த பேச்சு இந்து மதத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளதாகவும் சொல்லி, தங்கள் அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

    பாஜக அரசகுமாரின் பேச்சு... சசிகலா சொன்ன ஆரூடம்.. மீண்டும் பரபரப்பு களமாகிறதா தமிழக அரசியல் களம்?பாஜக அரசகுமாரின் பேச்சு... சசிகலா சொன்ன ஆரூடம்.. மீண்டும் பரபரப்பு களமாகிறதா தமிழக அரசியல் களம்?

    வருத்தம்

    வருத்தம்

    இந்து கோயில்கள் குறித்து பேசியதற்கு ஏற்கனவே திருமாவளவன் வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டிருந்தாலும், பலர் தங்கள் எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.. மற்றும் சிலர் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை கொடுத்தபடியே உள்ளனர்.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    இதில் அதிகமாகவே கொந்தளித்தது நடிகை காயத்ரி ரகுராம்தான்..,இதனால் இவரது ட்விட்டர் முடக்கப்படும் நிலைக்குப் போனது... திருமாவளவனை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்தார்.. இதனால், விசிகவினர் அவருக்கு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இதை பார்த்ததும் திரும்பவும் காயத்ரி ரகுராம் திருமாவுக்கு சவால் விட்டார்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    "நவம்பர் 27ம் தேதி மெரினா பீச்சில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா? என்று கேட்டிருந்தார். ஆனால், உடனே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் புகார் மனு அளித்தார் காயத்ரி.

    கோபம் வந்தது

    கோபம் வந்தது

    இந்த நிலையில் மீண்டும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் காயத்ரி. "நான் வணங்கும் தெய்வத்தை பற்றி பேசியது எனக்கு கோபத்தை கொடுத்தது. அதனால்தான் பேசினேன். அதற்கு மிகவும் கேவலமாக எதிர்வினை வந்தது. எத்தனையோ பேர் எதிர்த்து பேசினாலும், என்னை மட்டும் கேவலமாக விடுதலை சிறுத்தைகள் திட்டினார்கள்.

    ஆவேச பதிவு

    ஆவேச பதிவு

    நல்ல ஆண் என்றால் பெண்களை மதிக்க வேண்டும். எந்த பெண்ணையும், வேலைக்கு போகும் பெண்ணையும் தப்பாக பேசக்கூடாது. இனிமேல் ஜாதி வெறி, மதவெறி தூண்டக்கூடாது" என்று ஆவேச பதிவினை போட்டுள்ளார். இதற்கு விசிக தரப்பில் இருந்து என்ன மாதிரியான எதிர்வினை வரப்போகிறது என தெரியவில்லை.

    English summary
    actress gayathri ragurams controversy facebook comment about thirumavalavan and vck
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X