சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநில தலைமை மீது அதிருப்தி..! பாஜகவில் இருந்து ஒதுங்குகிறாரா நடிகை கவுதமி..?

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் மிக ஆக்டிவாக இயங்கி வந்த நடிகை கவுதமி அண்மைக்காலமாக கட்சிப் பணிகளில் இருந்து சற்று ஒதுங்கியே காணப்படுகிறார்.

கவுதமிக்கு தமிழக பாஜகவில் முக்கியப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாதது அவருக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிகிறது.

நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம் போன்றோர் சுற்றுப்பயணம், நிர்வாகிகள் சந்திப்பு என முழுவீச்சில் கட்சிப் பணிகளை கவனித்து வரும் நிலையில் நடிகை கவுதமி அதிலிருந்து விலகியே நிற்கிறார்.

அடேங்கப்பா... நாலு கால் பாய்ச்சலில் தமிழக பாஜக... 4 மொழிக் கொள்கையை கேள்விபட்டிருக்கீங்களா? அடேங்கப்பா... நாலு கால் பாய்ச்சலில் தமிழக பாஜக... 4 மொழிக் கொள்கையை கேள்விபட்டிருக்கீங்களா?

ஜெயலலிதா

ஜெயலலிதா

நடிகை கவுதமியை பொறுத்தவரை ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாக இருந்தவர். இரட்டை இலை சின்னத்தின் அனுதாபியாக இருந்த கவுதமி பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு தாமரை சின்னத்திற்கு வாக்குக் கேட்கத் தொடங்கினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வரும்போது அவரை சென்று சந்திப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என உற்சாகமாகவே இருந்து வந்தார்.

முக்கியப் பதவி

முக்கியப் பதவி

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவராக முருகன் பொறுப்பேற்ற பின்னர் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த கவுதமிக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவிக்கப்படுகிறது. கலை இலக்கிய அணியின் பொறுப்பை காயத்ரி ரகுராம் வசம் கொடுத்த முருகன் நடிகை நமீதா உள்ளிட்ட கட்சியின் புதுவரவுகளுக்கு செயற்குழு உறுப்பினர் பதவியை வழங்கினார். இதையடுத்து நமீதா, காய்த்ரி ரகுராம் ஆகியோரை அழைத்து நிர்வாகிகள் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

உடல்நலம் முக்கியம்

உடல்நலம் முக்கியம்

பாஜக செயல்பாடுகளில் இருந்து நடிகை கவுதமி ஒதுங்கியதற்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கிடைக்காதது ஒரு காரணம் என்றால் அவரது உடல்நலமும் மற்றொரு காரணம். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர் என்பதால் கொரோனா காலத்தில் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உடல்நலத்திற்கு உகந்ததாக இருக்காது என மருத்துவர்கள் தரப்பில் ஆலோசனையும், அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. . அதனை ஏற்று அமைதிகாக்க தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

தேசிய செய்தித்தொடர்பாளர்

தேசிய செய்தித்தொடர்பாளர்

நடிகை கவுதமிக்கு பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் பதவி தரக்கூடும் என சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. ஆனால் அதற்குள் கட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனிடையே கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக அதிமுக வேட்பாளர்களுக்கு நடிகை கவுதமி பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Gowthami dissatisfied with state leadership?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X