சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லா சொல்லுறீங்கய்யா இட்லி கணக்கு.. ட்வீட் போட்டு வாரிய கஸ்தூரி!

Google Oneindia Tamil News

சென்னை: "அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா... நல்லா சொல்லுறீங்க கணக்கு" என்று ஜெயலலிதாவின் உணவு செலவை தந்த அப்போலோ நிர்வாகத்தை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

75 நாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அப்போது அவர் இட்லி சாப்பிடுகிறார், பொங்கல் சாப்பிடுகிறார் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து அவரது உணவுக்காக ரூ.1.17 கோடி செலவானதாக அப்போலோ நிர்வாகம் தரப்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று கூறப்பட்டது.

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

இதையடுத்து, 2 இட்லிக்கு ரூ.1.17 கோடியா? என்றும், தெருக்கடையில இட்லி வாங்கிக் கொடுத்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய் கூட ஆகி இருக்காதே என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதேபோல நாட்டு நடப்புகளை மிச்சம் வைக்காமல் கலாய்த்து வரும் நடிகை கஸ்தூரியும் கோடிக்கணக்கில் கணக்கு காட்டியுள்ள அப்போலோ நிர்வாகத்தை தனது ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

மலை முழுங்கி

நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், "அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா.. அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா. அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா. நல்லா சொல்லுறீங்க கணக்கு !" என்று பதிவிட்டுள்ளார்.

இட்லி - வைரம்

அதேபோல மற்றொரு ட்வீட்டில் "யாருக்கும் கிடைக்காத அரிய புகைப்படம்- இதோ, அப்போலோவில் ஜெ வுக்கு குடுத்த இட்லி!" என்று இன்னொரு ட்வீட் போட்டுள்ளார். அதில் கையில் ஒரு வைரக்கல் மின்னுகிறது. இட்லி விலை வைரத்தை போல காஸ்ட்லி என்பதை காட்டவே கையில் அதனை வைத்தபடி போஸ்ட் செய்துள்ளார் கஸ்தூரி.

அரசுக்கு ஆதரவு

அரசுக்கு ஆதரவு

சமீபத்தில் கஸ்தூரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்தார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாயின. அதிமுகவில் இணைந்துவிட்டார் என்கிற செய்தியும் பரவியதும், உடனடியாக மறுப்பு தெரிவித்த கஸ்தூரி, "நல்ல குடிமகனாக அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசுக்கு மட்டும், அதிமுகவிற்கு இல்லை" என விளக்கினார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Actress Kasthuri comment about Apollo hospital's Jayalalitha Food cost on twitter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X