• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

குண்டி கழுவ நீர் இல்லை.. குந்திய இடத்தில் இந்தி திணிப்பு.. சீமானின் தம்பிகளோ அபாரம்.. கஸ்தூரி ட்வீட்

|
  Actress Kasthuri about Seeman: யாரை கேட்டு களத்தில் இறங்கினீர்கள்?.. கஸ்தூரி அடடே ட்வீட்- வீடியோ

  சென்னை: "சீமானின் தம்பிகளை பார்த்து கேட்கிறேன்.. யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? உங்களை எல்லாம் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

  பொதுவாக கஸ்தூரியின் ட்வீட், ஃபேஸ்புக் பதிவு என்றாலே காரசாரமாக இருக்கும். சில சமயங்களில் எதையாவது ஆர்வ கோளாறினால் பேசி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். சில சமயங்களில் புத்திசாலித்தன கருத்துக்களால் கைதட்டல்களையும் வாங்கி விடுவார்.

  இப்போது நாம் தமிழர் கட்சியைதான் மனசார பாராட்டி இருக்கிறார். சும்மா இல்லை, அக்கட்சியினர் செய்து வரும் நல்ல காரியங்களை பட்டியலிட்டுள்ளார். மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு தொண்டர்கள் செய்த பணிகளை போட்டோவுடன் போட்டு சபாஷ் சொல்லி உள்ளார். கஸ்தூரியின் ஃபேஸ்புக் பதிவுதான் இது:

   ஆட்டுமந்தை

  ஆட்டுமந்தை

  "தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களுக்கு அரசியல் என்றாலே ஒரு நல்ல பிசினஸ் என்றுதான் தெரியும். பொது சொத்தை ஆட்டையை போடும், பொதுமக்களை ஓட்டுப்போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாக தான் உள்ளது.

   சாதி மதம்

  சாதி மதம்

  குண்டி கழுவ நீர் இல்லாமல் தமிழன் தவித்துக்கொண்டிருக்க, குந்திய இடத்தில் இந்தியை வைத்து நம்மை திசைதிருப்புவோர் மத்தியில் சீமானின் தம்பிகள் வேளச்சேரியில் நீர்நிலைகளை தூர் வாருகிறார்கள்! மரம் நடுகிறார்கள், ஆண் பெண் சாதி மதம் கடந்து இணைந்து பார்க்காமல் குப்பை அள்ளுகிறார்கள் சாக்கடை அடைப்பை சுத்தம் செய்கிறார்கள்...

   மருத்துவ கல்லூரி

  மருத்துவ கல்லூரி

  ஒரு ஏரி என்று ஒன்று இருந்தால் அதை என்ன செய்ய வேண்டும்? முதலில் திருட்டுத்தனமாக தண்ணீரை விற்க வேண்டும். பிறகு ஏரி மணலை விற்க வேண்டும். அப்புறம் குப்பையால் நிரப்பி ஏரியை காணாமலடிக்க வேண்டும் . பிறகு அதை வாகாக வளைத்து ஏரி இருந்த இடத்தில் மருத்துவ கல்லூரி மல்டிப்ளெஸ் மாடிவீடு என்று கட்டிக்கொள்ள வேண்டும். இதுதானே காலம் காலமாக நடக்கிறது?

   தொலைநோக்கு பார்வை

  தொலைநோக்கு பார்வை

  இப்போது திடீரென்று ஒரு அரசியல் அமைப்பு மக்கள் பணியில் இறங்கினால் எப்படி சமாளிப்பது? நாம் தமிழர் தொண்டர்களை நான் கேட்கிறேன், யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? அப்புறம் மக்கள் எல்லா அரசியல்வாதிகளிடமும் சமூக பொறுப்பு , சுற்றுசூழல் விழிப்புணர்வு, தொலைநோக்கு பார்வை எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்களா? 20 ஆண்டுகளாக இந்த ஏரியை காட்டி காண்ட்ராக்ட் விட்டு கமிஷன் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரிகள் நிலைமையை எண்ணி பார்த்தீர்களா?

   கமல்ஹாசன்

  கமல்ஹாசன்

  ரத்த தானம் என்ற நல்ல வழக்கத்தை தன் ரசிகர் மன்றத்தில் விதைத்தவர் கமல்.மக்கள் நீதி மைய்யத்தின் சமூக செயல்பாடுகளில் ரத்ததானத்துக்கு மிக முக்கிய இடமுண்டு.அதே போல நா த க வினரும் குருதிக்கொடைக்கென ஒரு பாசறையே வைத்து செயல்படுகிறார்கள் .

   நல்ல விஷயம்

  நல்ல விஷயம்

  நாம் தமிழர் கட்சியின் குறுகிய இனவாதத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் என்பது இனமல்ல , உணர்வு என்று நினைப்பவள் நான். ஆனால் அந்த கட்சியின் செயல்பாட்டை வியக்காமல் இருக்க முடியவில்லை. தமிழர்கள் மட்டுமா உள்ளனர்? பழமொழிபேசுபவர், பல ஊர் காரர், ஏன், பசு பறவைக்கு கூட நல்லது நடந்துள்ளதே.

   மகேசன் சேவை

  மகேசன் சேவை

  பெரிது பெரிதாய் வாய்கிழிய கொள்கை பேசுபவர்கள் என்னத்தை கிழித்தார்கள், தேர்தலுக்கு தேர்தல் கொள்கையை அடகுவைத்து சமரசங்கள் செய்வதை தவிர? மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கை மட்டுமே தேவை. அது எங்கு இருப்பினும் வரவேற்கப்படவேண்டியது" என்று பதிவிட்டுள்ளார்.

  சபாஷ்

  சீமானை கஸ்தூரி பாராட்டினாலும், அதே சமயம் கமலையும் விட்டுக் கொடுக்காமல் பதிவிட்டுள்ளதற்கு, இரு கட்சிகளின் தொண்டர்களும் வரவேற்று கஸ்தூரிக்கு சபாஷ் சொல்லி வருகிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Actress Kasthuri has priased Seeman and Naam Tamilar Party members activities for public
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more