சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்னாம் கிளாஸ் வாத்தியாருக்கு இவ்வளவு சம்பளமா.. கஸ்தூரியின் டிவீட்டால் பெரும் சர்ச்சை

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கருத்து கூறி கஸ்தூரி ட்வீட்கள் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாக்டோ ஜியோ போராட்டத்தை விமர்சித்து கஸ்தூரி சர்ச்சை ட்வீட்- வீடியோ

    சென்னை: "ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு BE யை விட சம்பளம் அதிகம் என ட்வீட் போட்டு சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார் நடிகை கஸ்தூரி!

    பொதுவாக நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து கொண்டு, அவற்றை மிச்சம் வைக்காமல் கலாய்த்து வருபவர் கஸ்தூரி. சில சமயம், அறிவுஜீவிதனம் என்ற பெயரில் உளறி கொட்டி, நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார். சில சமயம் சமூக அவலங்களை தன் பதிவுகள் மூலம் கழுவி கழுவி ஊற்றுவார்.

    இப்போது விஷயம் என்னவென்றால், சினிமாகாரர்கள், அரசியல்வாதிகளை எல்லாம் விட்டுவிட்டு ஆசிரியர்களை வம்புக்கு இழுத்து உள்ளார்.

    கஸ்தூரி கருத்து

    கஸ்தூரி கருத்து

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை, மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து கஸ்தூரியின் கருத்து யாதெனில்:

    வேலை நிரந்தரம்

    "தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலைபளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம் , பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம்" என்கிறார்.

    பெரிய சம்பளம்

    மேலும் "தனியார் துறையில் நித்யகண்டம் பூர்ணாயுசு என்னும்படியாய் நாக்கு தள்ள வேலை செய்துக்கொண்டு அரசுவேலைக்காரர்களை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்க்கும் ஏமாளிகளுக்கு பெரிய சம்பளம், நிரந்தர வேலை, வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் இதெல்லாம் கனவில் கூட கிட்டாது" என்று கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

    கூசாம போராட்டமா?

    "ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு Tidel Park இல் வேலை செய்யும் BE யை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்? கூசாம போராட்டம் மட்டும் பண்ண தோணுது" என கேட்டுள்ளார்.

    கடுப்பில் ஆசிரியர்கள்

    கடுப்பில் ஆசிரியர்கள்

    கஸ்தூரியின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எவ்வளவு ஊதிய உயர்வு கொடுத்தாலும் ஆசிரியர்கள் மேலும் சம்பள உயர்வை கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஒரு தரப்பும், இவர்கள் கேட்கும் கோரிக்கைகள் நியாயமானதுதானே என்று மற்றொரு தரப்பும் தங்கள் வாதங்களை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் கஸ்தூரியின் ட்வீட்டுக்கு ஆசிரியர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    English summary
    Actress Kasthuri comment on Jacto Jio Teachers's Strike. Kasthuri's opinion is being supported and opposed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X