• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என் சொந்த அனுபவத்துல சொல்றேன்.. தைரியமா இருங்க.. கஸ்தூரியின் நம்பிக்கை டிவீட்!

|
  நீட் தேர்வு எழுதிய மாணவி ஊர் திரும்பும் வழியில் உயிரிழப்பு- வீடியோ

  சென்னை: "நீட்-க்கு எப்போது அரசியல் தீர்வு வருதோ வரட்டும்.. அதுவரைக்கும் மாணவர்கள் ஏன் வாழ்க்கையை வீணாக்கி கொள்ளணும், தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா கிடையாது" என்று நடிகை கஸ்தூரி ஒரு பதிவு போட்டுள்ளார்.

  நீட் தேர்வு முடிவில் நேற்று நம்ம ஊர் மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பிரமுகர்கள், பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் நீட் தேர்வு பற்றி தங்களுக்குள்ள கோபதாபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

  அந்த வகையில் கஸ்தூரியும் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லி உள்ளார். எதுக்குமே தற்கொலை தீர்வாகாது என்பதை தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவில் சொல்லி மாணவர்களுக்கு தைரியமூட்டி உள்ளார். அந்த பதிவு இதுதான்:

   தற்காலிகம்தான்

  தற்காலிகம்தான்

  "NEET தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி. நீட் தேர்வோ, பள்ளி இறுதி தேர்வோ, எந்த தோல்வியும் தற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது, அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ளவேண்டும்.

  அதிமுகவினரை கேவலமாக சித்தரிக்கும் துக்ளக் கார்ட்டூன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

   கில்லாடிகள்

  கில்லாடிகள்

  நம்மவர்கள் பலரும், யாராவது தடுக்கிவிட்டால், அதை சொல்லிக்காட்டியே அந்த நபரை மனஉளைச்சலில் வீழவைப்பதில் சூரர்கள்.. மற்றவர் கஷ்டத்தில் மீன் பிடிக்கும் கில்லாடிகள். தயவு செய்து சிறார்கள் படிப்பும் வாழ்க்கையும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடக்கலாமே?

   சவால்

  சவால்

  தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று மீண்டும் முயலவும் வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்கிறார்கள். பெற்றோருக்கு முதலில் counselling தேவைப்படுகிறது!

   அனிதா இல்லை

  அனிதா இல்லை

  இது போதாது என்று அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள், உண்மையாகவே கொள்கைரீதியாக NEET ஐ எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக்கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அனிதாவை போல தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தை தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.

  என்ன நடக்குமோ?

  பிள்ளைகளே, நீங்கள் நினைக்கலாம், உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே போயிற்று, உங்கள் பலவருட கனவு தவிடுபொடியாயிற்று என்றெல்லாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? வாழ்க்கை சக்கரம் எப்படி சுழலும் என்று யாருக்கு தெரியும்? இன்று கீழே இருப்பவர் நாளை மேலே செல்வார்...நாளை என்ன நடக்கும் என்று வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும்? இன்னும் சொல்ல போனால், இந்த உலகம் ஒரு பரிட்சையோடு நின்று விடுமா?எதிர்காலத்தில் எத்தனையோ சாதனைகள் உங்களுக்காகவே காத்துகொண்டு உள்ளன தெரியுமா?

   உலகம் உருண்டை

  உலகம் உருண்டை

  சந்தோஷங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லையே, உலகம் உருண்டை, சுழலதான் செய்யும், இல்லையா? பகலும் இரவும் மாறி மாறித்தான் வரும்... இருள் வந்தால் அடுத்து வெளிச்சம் வரும் என்றுதானே பொருள்? இருளை பார்த்து மிரண்டு அவசரப்பட்டு வெளிச்சத்தை பார்க்காமலே போய்விடலாமா?

   சொந்த அனுபவம்

  சொந்த அனுபவம்

  நாளை வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ ஏமாற்றங்களை சந்திக்கவேண்டிவரலாம், நம்மில் பெருவாரியானவர்களுக்கு வாழ்க்கை என்பதே போராட்டம்தானே ? அந்த போராட்டத்தில் ஜெயிக்க இந்த சின்ன தோல்வி ஒரு பயிற்சி என்று எடுத்துக்கொள்ளுங்கள் செல்லங்களே! என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எதை இழந்தாலும் நம்பிக்கையும் போராட்ட குணத்தையும் கைவிடாதீர்கள் செல்வங்களே!" என்று பதிவிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Actress Kasturi has advised the students who failed in the Neet Exam to "fight the challenge"
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more