சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எம்ஜிஆர் ஹீரோயின் கன்னத்தை தடவியதில் என்ன தவறு.. கஸ்தூரி மீண்டும் ட்வீட்

நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்வீட்டுக்கு விளக்கம் அளித்து, மன்னிப்பு கோரியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐபிஎல்-விளையாட்டையும், எம்ஜிஆர்-லதாவையும் ஒப்பிட்ட கஸ்தூரி- வீடியோ

    சென்னை: "எம்ஜிஆர் கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது?" என்று கேட்டதுடன், தான் போட்ட ட்வீட்டுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி!

    நேற்றிரவு கொல்கத்தா-சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியபோது, ஆட்டம் படு ஸ்லோவாக இருந்தது. எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சென்னை அணி நின்று நிதானமாக விளையாடியது.

    இந்த சந்தர்ப்பத்தில் கடுப்பாகி போன நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டார். "என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க" என்றார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், அதிமுக தரப்பினர் என அனைவருமே கொதிப்படைந்தனர்.

    "பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க".. கஸ்தூரி ஏடாகூட டிவீட்

    விளக்கம்

    விளக்கம்

    உடனடியாக கஸ்தூரியின் ட்வீட்டுக்கு பதிலடிகளை தர ஆரம்பித்து விமர்சிக்க தொடங்கினர். இதனால் அப்செட் ஆன நடிகை கஸ்தூரி, தான் பதிவிட்ட ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளதுடன், மன்னிப்பும் கேட்டு கொண்டுள்ளார்.

    என்ன தவறு?

    தனது ட்வீட்டில், "எம்.ஜி.ஆர் காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்" என்றார்.

    பேஸ்புக்

    பேஸ்புக்

    வெறும் ட்வீட்டில் மட்டுமல்லாது, ஃபேஸ்புக்கிலும் ஒரு பெரிய விளக்கத்தை அளித்துள்ளார். அதில், "எம்.ஜி.ஆர் காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

    வாத்தியார்

    வாத்தியார்

    புரட்சி தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசகலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன். காமம் இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான்.

    அமைதிப்படை

    அமைதிப்படை

    உடனே அமைதிப்படை அல்வா , தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு - நான் மிகவும் அற்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை.

    வருந்துகிறேன்

    வருந்துகிறேன்

    எம்.ஜி.ஆர் அவர்களை தலைவராகவும், தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல. இருப்பினும் இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்"} எனப் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actress Kasturi has given explanation about her tweet and apologies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X