• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இரக்கமே இல்லையாடா உங்களுக்கு.. குழந்தை அது.. எப்படிடா கொளுத்துனீங்க.. ஆண் திமிரா.. கதறி அழுத கஸ்தூரி

|

சென்னை: "2 நாள் திறந்துவிட்டாங்க, ஊர்ல இருக்கிறவன் எல்லாம் ஃபுல் ஸ்டாக் வாங்கி வெச்சிக்கிட்டான்.அந்த குழந்தையை எரிச்சானுங்களே அதுக்கு காரணம் குடிபோதைதான்.. ஒருவேளை தெளிவா இருந்திருந்தால் கொஞ்சம் ஈவு, இரக்கம் இருந்திருக்குமான்னு தெரியல.. அந்த மதுவை நமக்கு சப்ளை பண்றதே அரசாங்கம்தான்.. 7 பேர் சேர்ந்து ஒரு பொண்ணோட உடலுறுப்பில கம்பியை விட்டு நுழைத்தாலும், தையில் மிஷின் குடுத்து நம்மளை வெளியே அனுப்பிடுவாங்க அப்படிங்கிற திமிரில்தான் இப்படியெல்லாம் இன்னமும் நடக்குது' என்று விழுப்புரம் ஜெயஸ்ரீ மரணம் குறித்து கஸ்தூரி கதறி கதறி அழுது புலம்பி உள்ளார்.

2 நாட்களாகவே ஜெயஸ்ரீயின் மரணம் நம்மை விட்டு அகலவில்லை.. ஜெயஸ்ரீயின் மரண வாக்குமூலம் இன்னமும்கூட உலுக்கியபடியே உள்ளது... பல்வேறு தரப்பினர் இது சம்பந்தமாக தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வரும்நிலையில், கஸ்தூரியும் இதை பற்றி கூறியுள்ளார்.

ஐபிசி தமிழ் செய்திக்கு கஸ்தூரி பேட்டி அளித்துள்ளார்.. தன்னுடைய ஃபேஸ்புக் பதிவிலும் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் கஸ்தூரி அழுதபடியே ஜெயஸ்ரீ குறித்து பேசுகிறார். வழக்கமான கஸ்தூரி பேசும் தில் வீடியோவைவிட மாறுபட்ட விதத்தில் நெஞ்சை பிழிகிறது.. ஒரு தாய்மையின் பரிதவிப்பும், துடிப்புமாக கஸ்தூரி அடிமனசில் இருந்து கண்ணீர் விட்டு பேசிய வார்த்தைகள் இதுதான்:

அப்பா ஜெயபாலை திட்டுனா ஜெயஸ்ரீ எங்ககூட சண்டைக்கு வரும்..அதான் தீவைச்சு எரிச்சோம்.. ஷாக் வாக்குமூலம்

 வீடியோ

வீடியோ

"குழந்தைங்க அது.. அந்த வீடியோ பாத்தீங்களா? இறக்கிற தருவாயில்கூட ரொம்ப இன்னசென்ட்டா பேசுது அந்த குழந்தை.. தெறி படத்துல கூட இப்படி வரும். அதை நான் சினிமாவுல தான் பார்த்திருக்கேன்.. நிஜத்துல இப்படி நடந்தா யாருமே நம்ப மாட்டாங்க. ஆண்கள் மனது இப்படியா? சத்தியமா லேடீஸ்க்கு இப்படி செய்ய தோணுது.. இவங்க ஆண்களே இல்லை, மனுஷங்களே இல்லை.

 தனி சட்டம்

தனி சட்டம்

நம் நாட்டுல மிருகங்களுக்குன்னு தனியா சட்டம் வேணும்.. மனுஷங்களுக்கு தரும் தண்டனையை இவங்களுக்கு தர கூடாது.. இது எதுக்காக செஞ்சிருக்காங்கன்னா, முதலில் குடிபோதை.. ஒருவேளை தெளிவா இருந்திருந்தால் கொஞ்சம் ஈவு, இரக்கம் இருந்திருக்குமான்னு தெரியல.. மொதல்ல மனசாட்சியை பொதைக்கணும்னா அது மதுவால்தான் முடியும்.. அந்த மதுவை நமக்கு சப்ளை பண்றதே அரசாங்கம்தான்.. 2 நாள் திறந்துவிட்டாங்க, ஊர்ல இருக்கிறவன் எல்லாம் ஃபுல் ஸ்டாக் வாங்கி வெச்சிக்கிட்டான்.

 அரசாங்கம்

அரசாங்கம்

முதல் குற்றவாளி அரசாங்கம்தான்.. 2வது குற்றவாளி இந்த மாதிரி ஆட்கள், இவங்களோட நிஜமான புத்தி தெரியாம கட்சியில சேர்த்துக்கறதுதான். மூன்றாவது குற்றவாளி நம்முடைய சட்டங்கள், சமூக பார்வைகள்.. நம்ம சமுதாயம் நல்லவங்க இருக்கிற சமுதாயம்ன்னு நாம நினைக்கிறோம்.. ஒரு முன்விரோதத்துக்காக, ஒரு குடும்ப பகைக்காக, ஒரு குழந்தையை கொலை பண்ண 2 பேர் வந்திருக்காங்கன்னு ஆவேசத்தில் இதை செய்யல.

 பெட்ரோல்

பெட்ரோல்

தனியா ஒரு குழந்தை இருக்கு, சந்தர்ப்பம் நமக்கு ஆதரவா இருக்குங்கிறதை தெரிஞ்சுதான் பெட்ரோல் ஊத்தி தீ வெச்சு, வீட்டையும் பூட்டிட்டு போயிருக்காங்க.. இதுதான் இருக்கிறதுலயே மிருகத்தனமான செயல். இபிகோவில் இதுக்கெல்லாம் தண்டனை இல்லை. ஏன்னா நமது அதிகபட்ச தண்டனை மரண தண்டனைதான். பல வருஷம் மக்களின் வரிப்பணத்தில் ராஜ உபச்சாரத்தில் வேளா வேளைக்கு சோறு போட்டு ஜெயில்ல பராமரிச்சு ஒருநாள் எந்த பிரச்சனையும் இல்லாம 5 நிமிஷத்துல தூக்கில மாட்டி உயிர்போயிடும்.

 அனுபவிக்கணும்

அனுபவிக்கணும்

அந்த தண்டனை எல்லாம் மாத்தணும்.. நான் சொல்றது பைத்தியக்காரத்தனமா கூட இருக்கலாம், என்ன ஒரு பொம்பளை இப்படி ஈவு இரக்கம் இல்லாம பேசுதேன்னுகூட நீங்க நினைக்கலாம். ஆனால் நான் என்ன நினைக்கிறேன்னா, அந்த குழந்தையை அனாதையா தீக்கு இரையாக்கனாங்களே, அவனுங்களும் 2 புள்ளை குட்டியை பெத்திருப்பான் இல்லை? அவன் கையால அந்த குழந்தைங்களுக்கு நெருப்பு வெக்கணும்ங்க.. அந்த குழந்தைங்க அப்பாவிங்க, என்ன தப்புசெஞ்சுதுங்கன்னு நீங்க கேட்கலாம்.. அந்த கேள்வி ஒவ்வொருத்தர் மனசுலயும் வரணும்.. நான் ஒருத்தனுக்கு தீங்கு இழைச்சா, அதைவிட கஷ்டத்தை நான் ஒரு தகப்பனா அனுபவிக்கணும் அப்படிங்கிற ஒரு அறிவு அந்த மிருகங்களுக்கு எட்டணும்.

 மரபணுவை அழிக்கணும்

மரபணுவை அழிக்கணும்

மிருகங்களோட மரபணுவையே அழிக்கணும்.. அவன் கையாலேயே அவன் குடும்பத்தை கூண்டோடு அழிக்கணும்.. என் வாயில நல்ல வார்த்தையே வரல.. கெட்ட வார்த்தை வந்துடுமோன்னு பயமா இருக்கு...இப்படி எல்லாம் நான் யோசிக்க முடியுமான்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாது. இது போன்ற ஆட்களுக்கு தரும் தண்டனையால் 4 தலைமுறைகள் யோசிக்கணும்.. இதுபோல குற்றங்கள் நடந்துட்டுதான் இருக்கும்.. இவங்களுக்கு எல்லாம் என்ன நினைப்பு தெரியுமா?

  அப்பாவை திட்டுனா ஜெயஸ்ரீ சண்டைக்கு வரும்... அதான் எரிச்சோம்
   தையல் மிஷின்

  தையல் மிஷின்

  7 பேர் சேர்ந்து ஒரு பொண்ணோட உடலுறுப்பில கம்பியை விட்டு நுழைத்தாலும், தையல் மிஷின் குடுத்து நம்மளை வெளியே அனுப்பிடுவாங்க அப்படிங்கிற திமிராவது இல்லாமல் இருக்கும். இது பதவி திமிரில், ஆதிக்கத்திலும் வந்த செயல்.. அந்த குழந்தை உனக்கு என்ன பண்ணுச்சு? உனக்கு பகை யாரோட? யார் மேல பகையோ அங்கே காட்ட உனக்கு ஆண்மை இல்லை. நீ சாகக்கூடாதுடா.. ஜெயில்ல நீ சம்பாதிக்கிற ஒவ்வொரு பைசாவும் அந்த குடும்பத்துக்கு அனுப்பிவிடு.. மிருகத்துலகூட பெண் மிருகம், தாய் மிருகம் இருக்கு, இப்படி செய்யாதுங்க. அரசு என்ன செய்யும் தெரியுமா? இன்னும் 4 மதுக்கடையை திறந்து நம்ம ரத்தத்தை உறிஞ்சுவாங்க.. மனுஷங்களைகூட மிருகமா மாத்துறது மதுதான்.. மதுதான்!

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  actress kasturi condemns vizhupuram jayasree murder case
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X