சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Actress Kasthuri Speech: நடிகை கஸ்தூரியின் 'நச்' கேள்வி- வீடியோ

    சென்னை: பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுல ஓட்டை போட்டு பார்த்தா அது சரியா? என்று டிக் டாக் ஆப்பிற்கு ஆதரவாக பேசிய நடிகை கஸ்தூரி, டிக்டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம் என்று நீதிமன்ற தீர்ப்பையே விமர்சித்து, பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    டிக்டாக் ஆப்பிற்கு மதுரை ஹைகோர்ட் கிளை தடை விதித்திருந்தது. இந்த நிலையில் நேற்று நிபந்தனையுடன் அனுமதி தடையை நீக்கி உத்தரவிட்டது. முன்னதாக டிக் டாக் தடைக்கு இரு வேறு விதமான கருத்துக்கள் எழுந்தன. நடிகை கஸ்தூரியும் தடையை எதிர்த்துப் பேசியிருந்தார்.

    இபிகோ 302 என்ற புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஸ்தூரி பேசினார். அப்போது டிக்டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனமான நடவடிக்கை என்று சொல்லி நீதிமன்றத்தையே கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதன் சுருக்கம் இது:

    பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம் பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்

    சினிமா

    சினிமா

    "எதுக்கெடுத்தாலும் டிக்-டாக்கை தடை செய்ய வேணும்னு சொல்றாங்க. கேட்டால் அதுல தப்பு நடக்குதாம். முதல்ல சினிமாவை பத்தி இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாங்க.. கெட்டு குட்டிச்சுவரா போறாங்க..ன்னு சொன்னாங்க. உங்களை யாரு இப்போ கையை பிடிச்சு இழுத்துட்டு வந்து சினிமாவ பாக்க சொல்றது?

    நவீன பட்டினத்தார்

    நவீன பட்டினத்தார்

    சினிமாவை பார்த்துதான் கெட்டு போயிட போறீங்கன்னு நெனச்சா, உங்களை யாருங்க சினிமாவை பாக்க சொல்றது? இப்படி சொல்லற நவீன பட்டினத்தார்கள் யாராவது அரசே நடத்தும் மதுபானக்கடைகளை மூட சொல்லி இருக்காங்க?

    ஆபாச வீடியோ

    ஆபாச வீடியோ

    800 ஆபாச வீடியோக்கள் இணையதளத்தை தடை செய்தபோது கருத்து சுதந்திரம்னு சொல்லிட்டு கோர்ட்டுக்கு போனாங்க.. ஆனால் டிக்-டாக்கை மட்டும் தடை செய்வது ஏன்?

    பைத்தியக்காரத்தனம்

    பைத்தியக்காரத்தனம்

    சன்னிலியோன், வெளிநாட்டுக்காரங்க இருக்கிற வீடியோவுக்கெல்லாம் தடை எதுவும் இல்லை.. ஏன்னா, பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுல ஓட்டை போட்டு பார்த்தா அது சரி, அதுவே நம்ம பொண்ணு போன்ல டிக்டாக் இருக்க கூடாதுன்னா எப்படி? டிக்-டாக்கினால் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா? அதில திறமை வெளிக்காட்டலாம், ஆசிரியர்கள் பாடம்கூட அதில் நடத்தறாங்க. அதனால டிக் டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம்.

    செயலி

    செயலி

    800 ஆபாச வீடியோ இணையதளங்கள் தடைசெய்யப்பட்ட போது எதிர்த்தவர்கள், தற்போது டிக் டாக் செயலியை தடை செய்ய ஆதரிப்பது ஏன் என்பது தனக்கு தெரியும்

    தடை செய்வாங்களா?

    தடை செய்வாங்களா?

    இப்படியே ஒவ்வொன்னையும் தடை பண்ணிட்டே இருக்க முடியுமா? ஒரு விஷயத்தை செய்யாதேன்னு சொன்னா, திருட்டுத்தனமாத்தான் அதை செய்வாங்க. அதனால நம் சொந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் எப்படி தலையிட முடியும்? என்று பேசியுள்ளார் கஸ்தூரி. கஸ்தூரி பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Actress Kasturi has criticized Madurai High Court over Tik Tak App bad issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X