சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்!

மெரினாவில் நடிகை கஸ்தூரியை வந்திருந்த தேனி மக்கள் உபசரித்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Actress Kasturi: கஸ்தூரியை பாசத்துடன் சாப்பிட அழைத்த தேனி மக்கள்- வீடியோ

    சென்னை: மெரினா பீச் போறவங்களுக்கு தெரியும், நடிகை கஸ்தூரி அங்கதான் வாக்கிங், ஜாக்கிங் அடிக்கடி போவார் என்று!

    அப்படித்தான் நேற்றுகூட கஸ்தூரி பீச்சுக்கு போனார். ஆனால் அங்கே கண்ட காட்சியை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார். இதற்கு முன்பு அவர் இப்படி மலைத்து நின்றதில்லை. இதுதான் கஸ்தூரி பார்த்த சீன்:

    தேனியில் இருந்து ஒரு குரூப் எங்கோ கோயிலுக்கு கிளம்பி சென்றிருக்கிறார்கள் போல. எப்படியோ 40 பேர் கிட்ட இருப்பார்கள். அதில் நிறைய பேர் தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.

    குறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார்.. ஸ்டாலினை சரமாரியாக விளாசிய ஓபிஎஸ்! குறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார்.. ஸ்டாலினை சரமாரியாக விளாசிய ஓபிஎஸ்!

    கோயில்

    கோயில்

    கோயிலுக்கு சென்றவர்கள், திரும்பி போகும்போது மெரினா பீச்சையும் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு வந்திருக்காங்க. வந்த இடத்தில் சாப்பாட்டு நேரம். அதுக்காக ஓட்டல், ஃபாஸ்ட்புட் தேடி யாரும் போகவில்லை. அவங்களே சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கிறார்கள்.

    சாம்பார், ரசம்

    சாம்பார், ரசம்

    பீச் நடைபாதை ஓரத்திலேயே வரிசையாக சாப்பிட உட்கார்ந்துவிட்டார்கள். எல்லோருக்கும் தலைவாழை இலை. சாதம், சாம்பார், ரசம் என பரிமாறப்படுகிறது. பக்கத்தில் பெரிய பெரிய கூடையில் சாப்பாடும், குண்டானில் சாம்பார், ரசமும் உள்ளது.

    பெண்கள்

    பெண்கள்

    பெரியவர்கள், குழந்தைகளை வரிசையாக உட்கார வைத்து அந்த வீட்டு பெண்கள் பரிமாறுகிறார்கள். எல்லாரும் நல்லா சாப்பிடுகிறார்களா என்று அந்த வீட்டு நபர் வாட்ச் பண்ணுகிறார். இந்த காட்சியைதான் கஸ்தூரி பார்த்திருக்கிறார்.

    போட்டோக்கள்

    போட்டோக்கள்

    வந்த இடத்தில் இப்படி இலையில் சாப்பாடு பரிமாறியதை பார்த்ததும், அவருக்கும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆசையே வந்துவிட்டதாம். இந்த காட்சியை செல்போனில் போட்டோவாக எடுத்து கொண்டார் கஸ்தூரி.

    மறுத்த கஸ்தூரி

    மறுத்த கஸ்தூரி

    அங்கு வந்து நின்ற கஸ்தூரியை பார்த்ததும், எல்லோருமே அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்கள். "வாம்மா.. கஸ்தூரி.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா" என்று பாசத்துடன் கூப்பிட்டும் இருக்கிறார்கள். எனினும் அதனை அன்புடன் மறுத்த கஸ்தூரி, அவர்களுடன் சாப்பிட்டு இருக்கலாமோ என்று பிறகுதான் கவலைப்பட்டுள்ளார்.

    தேனி மக்கள்

    தேனி மக்கள்

    அந்த அளவுக்கு அந்த குடும்பத்தின் ஒற்றுமை, சாப்பாடு பரிமாறிய விதம், சாப்பிட அழைத்த பாங்கு எல்லாமே கவர்ந்துவிட்டதாம்! தேனிக்காரங்க பாசத்தை சொல்லணுமா என்ன?!

    English summary
    Actress Kasturi tweet, "a group of tourists from Theni having a nice banana leaf feast"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X