சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி

அரசு பஸ்சின் மேற்கூரை பிய்ந்தது குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பஸ் போய்க் கொண்டிருக்கிறது.. பலத்த காற்றில் அதன் மேற்கூரை பிய்ந்து தொங்குகிறது.. பஸ்சுக்குள் உயிரைப் பிடித்தபடி பதறிப் போன நிலையில் பயணிகள்.. கஸ்தூரி வறுத்தெடுத்துள்ளார் இந்த பஸ்ஸுக்கு பிட்னஸ் சர்டிபிகேட் கொடுத்த ஆர்டிஓ அதிகாரியை!தமிழகத்தில்தான் இதுபோன்ற கூத்துக்கள் எல்லாம் நடைபெறும் என்பதைப் போல பல கொடுமையான காரியங்களை நாள்தோறும் பார்த்து வருகிறோம். அதில் ஒன்றுதான் இந்த பஸ் பஞ்சாயத்து.

அது அரசுக்குச் சொந்தமான பேருந்து. பஸ் நம்பர் டிஎன் 38 - என்2769. பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையிலான பேருந்து. பஸ்ஸானது நேற்று முன்தினம் வடக்கிப்பாளையத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி போய்க் கொண்டிருந்தது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாது ஏன்?... கனிமொழி எம்.பி கேள்வி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாது ஏன்?... கனிமொழி எம்.பி கேள்வி

 மேற்கூரை

மேற்கூரை

அப்போது கொங்குநாட்டான் புதூர் பிரிவு பகுதியில் பஸ் வந்தபோது பலத்த காற்று வீசியது. இதில், இந்த பஸ்ஸின் மேற்கூரையானது பிய்ந்து விட்டது. உடனடியாக டிரைவர் வண்டியை சாலையோரமாக நிறுத்தி விட்டார். அதிர்ஷ்டவசமாக பஸ்சுக்குள் இருந்தவர்களுக்கோ அல்லது சாலையில் போய்க் கொண்டிருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

 20 பயணிகள்

20 பயணிகள்

பின்னர் டிரைவரும் கண்டக்டரும் இறங்கி மேற்கூரை தகரத்தை இழுத்து வெளியே எடுக்கின்றனர். இந்த கூத்தை அக்கம் பக்கத்தினரும், பஸ் பயணிகளும் கூடி வேடிக்கை பார்க்கின்றனர். பஸ்சுக்குள் பயணிகள் அமர்ந்தபடி காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 பயணிகள் உள்ளே இருக்கின்றனர்.

 பிட்னஸ் சான்றிதழ்

பிட்னஸ் சான்றிதழ்

இதில் கொடுமை என்னவென்றால் 2 மாதத்திற்கு முன்புதான் இந்த பஸ்சுக்கு பிட்னஸ் சான்றிதழ் வாங்கியுள்ளனர். ஆனால் அதற்குள் இப்படி பல்லைக் காட்டி விட்டது இந்த டப்பா பஸ். முறையாக பஸ்சை சோதிக்காமல் எஃப்சி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அதிகாரி சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

நடிகை கஸ்தூரி

இந்த சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் போட்ட டிவீட்டில், "தமிழக அரசுப் பேருந்து பலத்த காற்றால் மேற்கூரை பிய்ந்து போய் விட்டது. அதற்கு 2 மாதங்களுக்கு முன்பு எஃப்சி சான்றிதழ் கொடுத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்ன ஒரு முட்டாள்தனம் இது. இந்த சஸ்பென்சன் போதுமா.. பலத்த அபராதம் விதித்து அவர் நியாயமற்ற முறையில் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் அல்லவா பறிமுதல் செய்ய வேண்டும்" என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

English summary
Actress Kasturi tweet about TNSTC bus roof comes apart due to heavy wind and condemns RTO officers dishonest activity
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X