சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி, விஷாலை எப்படி கைது செய்யலாம்? விஷாலுக்கு ஆதரவாக குஷ்பு நச் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டிய விஷாலுக்கு ஆதரவாக குஷ்பு கேள்வி

    கோவை : தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியது, விஷாலை கைது செய்தது ஜன நாயகத்திற்கு எதிரானது என்றும், விஷால் உள்ளிட்டவர்களை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித்தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

    கோவையில் நடைபெற்ற இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தேசிய மாநாட்டில் அவர் பங்கேற்றார். பின் செய்தியாளர்களுக்கு குஷ்பு பேட்டியளித்தார்.

    actress kushboo condemns actor vishal arrest in producer council issue

    அப்போது அவர் கூறியதாவது :

    விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு எதிரணியிடம் ஆதாரங்கள் இல்லை. உயர் நீதிமன்றம் மூலம் விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் வெற்றி கிடைத்தது. அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை எப்படி வந்தது?

    இதற்காக முதல்வரிடம் செல்ல வேண்டியதில்லை. எதிர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் பாஜக, ஒருவர் அதிமுக என்பதால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல் இந்த இரு நாட்கள் சம்பவம் இருந்தது.

    ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்தது மகிழ்ச்சி. ஆனால் இதுவரை ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரசில் இருந்து யாரும் சொல்லவில்லை. கணினியில் தகவல் எடுக்கலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது.

    2 ஆண்டுகளாக நாங்கள் சொன்ன போது குறைக்காத ஜி.எஸ்.டி. தற்போது 5 மாநில தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின் குறைத்து உள்ளது.

    நான் தான் ராஜா... நான் தான் மந்திரி போல் பிரதமர் நடந்துக்கொள்கிறார். வெளிநாட்டில் தான் அதிகமாக இருப்பதால், என்.ஆர்.ஐ. பிரதமர் என்று தான் சொல்ல வேண்டும்.

    பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு சென்ற பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை. மாநில ரீதியாக அதிமுக அரசு விவசாயிகளுக்கு என்ன உதவியது?

    இவ்வாறு குஷ்பு பேட்டியளித்தார்.

    English summary
    Famous Actress kushboo supports Actor Vishal and condemns his arrest in connection with Cinema producers council.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X