சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் முடிவில் தவறில்லைதான்.. ஆனால் இத்தனை பேர் கைது எதற்கு.. குஷ்பு கேள்வி

காஷ்மீர் விவகாரம் குறித்து நடிகை குஷ்பு ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: காஷ்மீரையும், இந்தியாவையும் பிரிக்கும் எந்த ஒரு கோட்டையும் நீக்க வேண்டும்தான். அதில் தவறில்லை. ஆனால் இத்தனை தலைவர்களைக் கைது செய்துதான் அதைச் செய்ய வேண்டுமா என்று நடிகை குஷ்பு கேட்டுள்ளார்.

காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி விட்டது. சுதந்திரமடைந்த காலம் முதல் இருந்து வந்த அந்த சலுகை பறிக்கப்பட்டு இந்தியாவின் இதர பகுதிகளில் ஒன்றாக ஜம்மு காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது.

Actress Kushboos comment on Kashmir issue

இதுதவிர்த்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் அது மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு கருத்துக்களும், மறு கருத்துக்களும் வலம் வந்து கொண்டுள்ளன. அந்த வகையில் நடிகை குஷ்புவும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குஷ்பு போட்டுள்ள டிவீட்டில், காஷ்மீரையும், இந்தியாவின் இதர பகுதிகளையும் பிரிக்கும் எந்த ஒரு சட்டமும், கண்ணுக்குத் தெரியாத கோடும் நீக்கப்பட வேண்டியதுதான். ஆனால் காஷ்மீரை அமைதிப்படுத்தி விட்டுத்தான் அதை செய்ய முடியுமா. பாஜக எதைப் பார்த்துப் பயப்படுகிறது. தலைவர்களைக் கைது செய்துள்ளதன் மூலம் பாஜகவின் பயம் நமக்கு புரிய வருகிறது என்று கூறியுள்ளார் குஷ்பு.

இப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக? மத்திய அரசின் அதிரடி முடிவு! இப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக? மத்திய அரசின் அதிரடி முடிவு!

தனது டிவீட்டில் காஷ்மீர் மக்கள் இந்த நீக்கத்தை விரும்ப மாட்டார்கள். இதனால்தான் அவர்களை அமைதிப்படுத்தி விட்டு மத்திய அரசு இந்த செயலை செய்துள்ளதாக மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் குஷ்பு. பெரும்பாலானவர்களும் கூட இதையேதான் சொல்லி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Kushboo tweet about Kashmir issue and she says that, "Arresting the leaders only shows BJP a s aware of their strength and fears them"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X