India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை மீனாவின் குமுறல்.. "ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க.. நிப்பாட்டுங்க.. கஷ்டமா இருக்கு".. உருக்கும் வரிகள்

Google Oneindia Tamil News

சென்னை: தன்னுடைய கணவரின் மரணம் குறித்து தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா கேட்டுக்கொண்டுள்ளார்.. இதையடுத்து நெட்டிசன்கள் மனமிரங்கி மீனாவுக்கு வருத்தங்களையும், சமாதானங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

  Meena | என் அன்பான கணவரை இழந்து வாடுகிறேன்... *Kollywood | Filmibeat Tamil

  பிரபல நடிகை மீனா, கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பரை திருமணம் செய்துகொண்டார்.. இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது..

  சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மீனா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்... கடந்த 3 நாட்களுக்கு முன்பு, மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீரென மரணமடைந்தது, ஒட்டுமொத்த திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  Flashback வித்யாசாகர் வரனை முதலில் மறுத்தேன்.. நல்லவேளை மிஸ் செய்யவில்லைனு பூரித்த மீனா Flashback வித்யாசாகர் வரனை முதலில் மறுத்தேன்.. நல்லவேளை மிஸ் செய்யவில்லைனு பூரித்த மீனா

   சோஷியல் மீடியா

  சோஷியல் மீடியா

  இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.. இதனைத் தொடர்ந்து மீனாவின் கணவர் வித்தியாசகர் உடலுக்கு திரைத்துரையினர் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.. மீனாவுக்கு கடைசிவரை கூடவே இருந்து ஆறுதல் சொன்னார்கள்.. இதனிடையே மீனாவின் கணவர் மரணம் குறித்து சோஷியல் மீடியாக்களிலும், மற்றும் யூடியூப் வீடியோக்களிலும் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

   திடீர் குழப்பம்

  திடீர் குழப்பம்

  இந்த தகவல்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதெல்லாம் உண்மையா? பொய்யா? என்ற குழப்பத்திற்கு ஆளானார்கள்.. இந்நிலையில்தான், தன்னுடைய கணவரின் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று மீனா கேட்டுக்கொண்டுள்ளார்... இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.. அந்த பதிவில் உள்ளதாவது:

   புரிஞ்சுக்கோங்க

  புரிஞ்சுக்கோங்க

  "என் அன்பு கணவர் வித்யாசாகரின் மரணம் என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது... அனைத்து ஊடகங்களும் எங்களது தனிப்பட்ட உணர்ச்சிக்கு மதிப்பு அளித்து இந்த சூழலில் எங்களின் நிலையை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்... தயவு செய்து எனது கணவரின் மரணம் குறித்து தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.

   முதல்வர் ஸ்டாலின்

  முதல்வர் ஸ்டாலின்

  இந்த இக்கட்டான கால கட்டத்தில், எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், முதல்வர் ஸ்டாலின், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

   அமைச்சர் பொன்முடி

  அமைச்சர் பொன்முடி

  முன்னதாக, மீனாவின் கணவர் மறைவுயொட்டி தமிழக அமைச்சர் பொன்முடி, மீனாவின் இல்லத்திற்கு சென்று அவரது கணவர் வித்யாசாகரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்... தொடர்ந்து மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலும் கூறினார்... உடல்நலம் பாதிக்கப்பட்டு, 95 நாட்களாக சுயநினைவு இழந்திருந்த நிலையில், அந்த நினைவு திரும்பாமலேயே வித்யாசாகர் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டது.. அதாவது, எஸ்மோ சிகிச்சை தந்தாலும், வேறு உயர் சிகிச்சையை செய்வதற்காக மீனா குடும்பத்தினர் தயாராகி வந்ததாகவும், அந்த சிகிச்சையை செய்தால், நிச்சயம் வித்யாசாகர் பிழைத்து விடுவார் என்று பெரிதும் நம்பி வந்திருக்கிறார்கள்..

  மனக்கசப்பு

  மனக்கசப்பு

  ஆனால், அதற்குள் உடல்நிலை ஒத்துழைக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மீனாவை கதிகலங்க வைத்துவிட்டது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சினிமா வட்டாரத்தினர்.. ஆனால், சோஷியல் மீடியாவிலோ வேறு விதமான தகவல்கள் பரவின.. மீனாவுக்கும், அவரது கணவருக்கும் மனக்கசப்பு இருந்து வருவதால், மீனா, கணவருடன் பேசியே பல மாதங்கள் என்று ஒரு தகவல் வந்தது. இதற்கு பிறகு, மீனா மீது கணவருக்கு நிறைய சந்தேகம் இருந்ததாகவும், அதனாலேயே இவர்கள் பரிந்து வாழ்கிறார்கள் என்று இன்னொரு தகவல் வந்தது..

   உருக்கமான பதிவு

  உருக்கமான பதிவு

  சாகும்போது, வித்யாசாகர் உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன என்று மற்றொரு தகவல் வந்தது.. இத்தகைய தகவல்கள்தான் மீனாவை நிலைகுலைய வைத்துவிட்டதாக தெரிகிறது.. இதையடுத்தே நேற்றைய தினம் மீனா அந்த பதிவை பதிவிட்டுள்ளார்.. இந்த உருக்கமான பதிவு, நெட்டிசன்களையும் கலங்க வைத்து வருகிறது.. நீங்க கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம் உங்களுக்கு.. இந்த உலகம் அப்படித்தான், தொடர்ந்து உங்கள் வழியில் முன்னேறுங்கள்.. இழப்பின் வலி, இழந்தவர்களுக்குதான் புரியும்.. கணவரை கடைசியாக கட்டிப்பிடித்து கதறியதை கண்டு கலங்கிவிட்டோம் தோழி.. மனம் ஆறுதல் கொள்ளுங்கள்" என்று மீனாவுக்கு தைரியம் சொல்லி வருகிறார்கள் இணையவாசிகள்.!

  English summary
  actress meena twitter post against rumors of her husband death actress meena twitter post against rumors of her husband death நடிகை மீனா தன் கணவரின் மரணம் குறித்து உருக்கமான போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X