சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் அந்த 'பார்ட்டி'க்கு போயிருக்க கூடாது.. போனதால்தான் அது நடந்தது.. நிவேதா பெத்துராஜ்

மீடு பிரச்சனைக்கு நானும் ஆளானேன் என்று நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "நான் 'அந்த பார்ட்டிக்கு' போய் இருந்திருக்கவே கூடாது. அதனால் நான் நானும் பாலியல் பிரச்சனைக்கு ஆளானேன்" என்று நடிகை நீது பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

மீடூ வந்தாலும் வந்தது, எல்லா பெண் பிரபலங்களும் தங்களின் பாலியல் இன்னல்களை வெளிப்படையாக வந்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களின் தைரியங்கள் பாராட்டப்பட வேண்டியது. துணிந்து கருத்து சொல்வதும் வரவேற்ககூடியது.

ஜனநாயக அடிப்படை

ஜனநாயக அடிப்படை

இதன்மூலம் குற்றஞ்சாட்டப்படுவர்களுக்கு கெட்ட பெயர் வருகிறதோ இல்லையோ, இப்படி புகார் அளிப்பவர்களின் பெயர்கள் வெகுவாகவும் வேகமாகவும் கெட்டு வருகிறது என்பதுதான் மீடூ இதுவரை உணர்த்திய உண்மை. எந்த புகார் என்றாலும் ஆதாரம் தேவை. இதுதான் காவல்துறை, நீதிமன்ற, ஜனநாயக அடிப்படை நியதி.

வாவ் .. ஒரே ஜம்ப்.. அதி வேக சேசிங்.. கூண்டிலிருந்து தப்பிய கைதிகளை விரட்டி பிடித்த ஜட்ஜ்!]வாவ் .. ஒரே ஜம்ப்.. அதி வேக சேசிங்.. கூண்டிலிருந்து தப்பிய கைதிகளை விரட்டி பிடித்த ஜட்ஜ்!]

காலில் ஏன் விழுந்தார்?

காலில் ஏன் விழுந்தார்?

ஆனால் சின்மயி விவகாரத்தை பொறுத்தவரை, இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளான விஷயம் மட்டும் நாடு முழுக்க தெரிந்துவிட்டது. அதோடு ஆதாரம் தேடி கொண்டு வருகிறேன் என்று போனார். அவர் இன்னும் வரவே இல்லை. ஆனால், சின்மயி ஏன் வைரமுத்து காலில் விழ வேண்டும், ஏன் பாடலாசிரியரை விழாக்களில் புகழ வேண்டும், ஏன் காவல் நிலையம், நீதிமன்றம், சினிமா சங்கங்களின் உதவியை நாடவில்லை என்று மட்டும் கேள்வி கேள்விமேல் கேட்டு வறுபட்டு போனார்.

ஆடியோ விழா

ஆடியோ விழா

இதேபோலதான் 'திருட்டு பயலே' இரண்டாம் பாகத்தில் நடித்தபோது தன்னிடம் சுசி கணேசன், தவறாக நடந்து கொண்டதாக அமலாபால் குற்றம்சாட்டியிருந்தார். இப்படி சொன்னதும், 'திருட்டுப்பயலே' 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமலாபால் சுசி கணேசனை வெகுவாக பாராட்டும் காட்சியை நெட்சன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

நல்ல மனிதர்

நல்ல மனிதர்

அப்போது பேசிய அமலாபால், "சுசி கணேசன் நல்ல ஒரு மனிதர், எனக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்தார்" என்று சொல்லி இருக்கிறார். தவறாக நடந்து கொண்ட சுசிகணேசனை அமலாபால் அப்போதே ஏன் பகிரங்கபடுத்தி குற்றஞ்சாட்டவில்லை? ஏன் நாலு பேர் முன்னிலையில் பாராட்டி கொண்டு இருக்கிறார்? என்பன போன்ற கேள்விகளும் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன.

அந்த பார்ட்டி

அந்த பார்ட்டி

அடுத்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ், 5 வயதிலேயே தான் பாலியல் புகாருக்கு ஆளானதாக கூறினார். தற்போது நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதும், ‘மீ டூ' பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு ‘பார்ட்டி'க்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை.

கவர்ச்சி படங்கள்

கவர்ச்சி படங்கள்

தவறு என் மீது தான். நான் அந்த ‘பார்ட்டி'க்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்" என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இணையத்தில் நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள். இதை பற்றி கேட்டால், "அந்த படங்கள் எல்லாம் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, ‘மாடலாக' இருந்தபோது எடுக்கப்பட்டவை" என்று கூறி சமாளித்து வருகிறார்.

மதிப்பு - நீதி

மதிப்பு - நீதி

பாலியல் புகாருக்குள்ளானோம் என்று சொல்பவர்கள் இப்படி முன்வந்து ஆதாரம் இல்லாமல் புகார் அளிக்கும்போது மீண்டும் தங்களை தாங்களே அசிங்கப்படுத்தி கொள்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. ஆதாரத்துடன் வந்து பொதுமக்களை சந்தித்தால்தான் எதற்குமே மதிப்பும், நீதியும் என்பதை புகார் அளிக்குமுன் பிரபலங்கள் யோசிக்க வேண்டும்.

English summary
Nivetha Pethuraj reveals she was sexually harasse
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X