India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை.. "என்னுள் அவர்".. பிரியா ஆனந்த் பகீர்!.. புகைச்சலில் 80ஸ் கிட்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: நித்தியானந்தாவிடம் ஏதோ இருக்கிறது, அவரை திருமணம் செய்ய ஆசை இருக்கிறது என்றும் நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா திடீரென நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் தனித்தீவை வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டிருந்தார்.

நித்தியை சுற்றி எப்போதும் சிஷ்யர்களும் சிஷ்யைகளும் இருப்பர். இன்டர்போல், ரெட் கார்னர் நோட்டீஸ், ப்ளூ கார்னர் நோட்டீஸ் என எதை பற்றியும் கவலைப்படாமல் அவருக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்பு, குசும்பு பேச்சால் இணையத்தை கலக்கி வந்தார்.

நித்தி கம்மிங்.. கைலாசாவில் குருபூர்ணிமா! “நித்தியானந்தா” நிச்சயம் வராராம் -அடித்துசொல்லும் சீடர்கள் நித்தி கம்மிங்.. கைலாசாவில் குருபூர்ணிமா! “நித்தியானந்தா” நிச்சயம் வராராம் -அடித்துசொல்லும் சீடர்கள்

சத்சங்கம்

சத்சங்கம்

இதில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. அவர் கடந்த மார்ச் மாதம் முதல் சத்சங்கங்களை நடத்தவில்லை. அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அவர் லைவில் தோன்றியே 3 மாதங்கள் ஆயிற்று. அவருக்கு வென்டிலேட்டர், பல்ஸ்மீட்டர் எல்லாம் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரும்பி வந்துட்டேன்

திரும்பி வந்துட்டேன்

இந்த நிலையில் திரும்ப வந்துட்டேன் என எழுதி ஒரு கடிதத்தை தனது பேஸ்புக்கில் நித்யானந்தா வெளியிட்டிருந்தார். இன்றும் கைலாசாவில் நடிகை ரஞ்சிதா, சில சிஷ்யைகள், சிஷ்யர்கள் புடைச்சூழ இருந்து வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

அவர் வேறு யாருமில்லை, தமிழில் வாமனன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா ஆனந்த் தான். இங்கிலீஷ் விங்கிலீஷ் எனும் படத்தில் ஸ்ரீதேவி, அஜித்துடன் நடித்திருந்தார். எல்கேஜி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு ஆங்கிலம், பெங்காலி, இந்தி, மராத்தி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் தெரியும். இவர் சோஷியல் மீடியாவில் படுஆக்டிவ்வாக இருப்பார்.

நித்யானந்தா

நித்யானந்தா

அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் நித்யானந்தா குறித்த பதிவை போடுவார். இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் நித்யானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்யானந்தாவில் நித்யானந்த் என இருக்கிறது. என் பெயர் பிரியா ஆனந்த், எங்களுக்கு திருமணம் நடந்தால் நான் பெயரை மாற்ற வேண்டிய தேவையே இருக்காது.

நித்திகிட்ட ஏதோ இருக்கு

நித்திகிட்ட ஏதோ இருக்கு

நித்யானந்தாவுக்கு மக்களை ஈர்க்கத் தெரியும். அவரை இத்தனை பேர் பாலோ செய்கிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ இருக்கிறது என்றுதானே அர்த்தம். ஏம்மா 80 கிட்ஸ் (பிரியா 1986 இல் பிறந்தவர்) இன்னும் சிலர் திருமணம் ஆகாமல்தான் இருக்கோம், எங்களை விட்டுவிட்டு ஏற்கெனவே சிங்கிளா ஜாலியா இருக்கும் நித்தியை ஏன்ம்மா டிஸ்டர்ப் பண்றேனு நெட்டிசன்கள் அதகளம் செய்து வருகிறார்கள். பேரை மாத்தக் கூடாதுங்கிறதுக்காக இப்படியாம்மா!

English summary
Actress Priya Anand wants to marry Nithyananda. She likes him very much.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X