சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனது அம்மா பள்ளியில் டீச்சர்... நான் நியூட்ரிஷியன் டீச்சர்... பிரியா ப்ரின்ஸ் ஓபன் டாக்..!

Google Oneindia Tamil News

சென்னை: ரேடியோ ஜாக்கியாக தனது ஊடக பயணத்தை தொடங்கிய பிரியா ப்ரின்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என பல அவதாரங்கள் எடுத்து இப்போது நியூட்ரிஷியன் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்களில் (motivational speaker) ஊக்கமளிக்கும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார்.

இதனிடையே தமது ஊடக பயணம் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;

அச்சச்சோ.. பிரியங்கா கால்ல முள்ளு குத்திருச்சா.. ரசிகர்கள் கவலை!அச்சச்சோ.. பிரியங்கா கால்ல முள்ளு குத்திருச்சா.. ரசிகர்கள் கவலை!

ரேடியோ ஜாக்கி

ரேடியோ ஜாக்கி

நான் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது என நினைக்கிறேன் சூரியன் எஃப்.எம். சார்பில் ரேடியோ ஜாக்கிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதற்கு விண்ணப்பித்தேன். ஆடிஷனுக்கு சென்றால் அங்கு ஆயிரக்கணக்கானோர் நிற்கின்றனர். சரி என்னதான் நடக்கிறது என பார்த்துவிடுவோம் என்ற தைரியத்தில் அந்த ஆடிஷனில் கலந்துகொண்டேன். அதில் நான் உட்பட 100 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அந்த 100 பேரில் இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 20. அந்த 20 நபர்களில் நானும் ஒருத்தி.

அதிர்ஷ்டலட்சுமி

அதிர்ஷ்டலட்சுமி

இப்படித்தான் ரேடியோ ஜாக்கியாக ஊடகத்திற்குள் வந்தேன். பள்ளியில் படித்தாலும் சூரியன் எஃப்.எம்.-ல் தினமும் ஒரு மணி நேரம் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினேன். அப்போது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்டதால் நிகழ்ச்சி தொகுப்பாளராக விண்ணப்பித்திருந்தேன். அதிலும் தேர்வாகி நான் முதல்முறையாக ஸ்கிரீனில் வந்த நிகழ்ச்சி 'அதிர்ஷ்டலட்சுமி'. இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன். அதுவரை என்னுடைய குரலை மட்டும் எஃப்.எம்.-ல் கேட்டவர்கள் அதிர்ஷ்டலட்சுமி நிகழ்ச்சி மூலம் நான் யார் என்பதை அறிந்தார்கள்.

சமூக நிகழ்வுகள்

சமூக நிகழ்வுகள்

இதனிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நேரத்தில் செய்தி வாசிப்பாளராக இணைந்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் இந்த பணியில் சேர்ந்த போது எனக்கு செய்தியே வாசிக்கத் தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டேன். அதுவரை விளையாட்டுத்தனமாக இருந்த நான் செய்தி வாசிப்பாளர் பணியை தொடங்கியது முதல் சமூக நிகழ்வுகள் குறித்து கவனம் கொண்டேன். பின்னர் சூழல் காரணமாக அந்தப் பணியில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் சென்றேன்.

நியூட்ரிஷியன்

நியூட்ரிஷியன்

விஜய் தொலைக்காட்சியில் 2 சீரியல்களில் நடித்தேன். திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். அதேபோல் விளம்பரங்களில் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது கூட சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். இப்படி இந்த பணிகளை எல்லாம் நான் செய்தாலும் கூட எனக்கு மன திருப்தியை, பெருமையை தரும் பணி நியூட்ரிஷியன்.

இலவச ஆலோசனை

இலவச ஆலோசனை

ஒரு மனிதன் தன் உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது பெரிய கலை. இதை எல்லோராலும் செய்யவும் முடியாது டயட்களை கடைபிடிக்கவும் முடியாது. இதை பிறருக்கு எடுத்துச்சொல்லி நியூட்ரிஷியன் ஆலோசனைகள் வழங்கி வருகிறேன். ஏராளமானோர் இன்ஸ்டாகிராம், முகநூல் மூலம் இலவச ஆலோசனைகளை கேட்டு பெறுகின்றனர். மீடியா செலிபிரிட்டி என்பதை கடந்து நான் ஒரு நியூட்ரிஷியன் என்பது பெருமையாக உள்ளது.

வீட்டில் செல்லம்

வீட்டில் செல்லம்

எனது அம்மா பள்ளியில் டீச்சராக இருந்தார், நான் நியூட்ரிஷியன் டீச்சராக இருக்கிறேன். கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்பாவும் அம்மாவும் மிகச் செல்லமாக என்னை வளர்த்தனர். ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த நான், எனக்கான வாய்ப்புகளை நானே தேடி பெற்றது தான். செய்தி வாசிப்பில் இப்போதும் ஆர்வமாகவே இருக்கிறேன், உரிய வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக்கொள்வேன் என கூறி முடித்தார் பிரியா பிரின்ஸ்.

English summary
Former Radio Jockey and actress Priya Prince shares about her media journey. Now she is working as a nutrition and also gives motivational speech at schools, colleges and businesses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X