India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரபல நடிகை.. மாமனார் முன்பு அந்த "கோலத்தில்".. இதுல வீடியோ வேற.. மாங்காட்டில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல நடிகை, மாமனார் மீது பகிரங்கமான புகார் தந்திருக்கும் நிலையில், அது தொடர்பான விசாரணையை மாங்காடு போலீசார் கையில் எடுத்துள்ளனர்... என்ன நடந்தது?

சென்னையை சேர்ந்தவர் அந்த துணை நடிகை.. ரஜினியின் அண்ணாத்த, எதற்க்கும் துணிந்தவன், சிவகுமார் சபதம், நட்பே துணை, தேவராட்டம், துப்பறிவாளன், சீரியலில் பேரன்பு உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

சும்மா தலையை மட்டும் ஆட்டாதீங்க! வாயை திறந்து பேசுங்க! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய இளம் அமைச்சர்! சும்மா தலையை மட்டும் ஆட்டாதீங்க! வாயை திறந்து பேசுங்க! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய இளம் அமைச்சர்!

இதைதவிர சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.. இவர் தற்போது, மாங்காடு அருகே கெருகம்பாக்கம் பாலகிருஷ்ணண் நகர் பகுதியில் வசித்து வருகிறார்..

மாமனார்

மாமனார்

இவர் திடீரென தன்னுடைய மாமனார் மீது பகிரங்க புகார் ஒன்றை மாங்காடு போலீசில் தந்திருந்தார்.. ஆனால், அந்த புகார் குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நடிகையே குற்றமும் சாட்டினார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது: "மனநலம் சரியில்லாதவரை எனக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.. நான் நடிகையாக இருப்பதால், எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்வேன் என்று என் மாமனார் நினைத்து விட்டார்.

ஆபாசம்

ஆபாசம்

அதனால், பலமுறை எனக்கு மறைமுகமான பாலியல் சீண்டல் தந்தார்.. ஆபாசமாக பேசினார்.. "நீ ஒரு நடிகை தானே? என்று சொல்லி சொல்லியே, என் மீது உடல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார்... என் மாமனார் சரவணவேல், மாமியார் சாந்தி 2 பேருமே என்னை மதிப்பதில்லை... எத்தனையோ முறை, இது தொடர்பாக நான் போலீசில் புகார் தந்தேன்.. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுத்ததில்லை.. இதுக்கெல்லாம் காரணம், என் மாமியாரின் நெருங்கிய உறவினர், போலீசில் மிகப்பெரிய போஸ்டிங்கில் இருப்பது தான்.

சில நாளுக்கு முன்பு, என் மாமனார் என்னை நிர்வாணப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்... நான் அதிர்ச்சி அடைந்து, அவரை தடுத்தேன்.. அந்த ஆத்திரத்தில் ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்து வந்து என் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்... இதனால் எனக்கு முகம், உடம்பெல்லாம் ரத்தம் கொட்டியது.. பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.

 ரணங்கள் - தழும்புகள்

ரணங்கள் - தழும்புகள்

என்ன காரணம் என்று தெரியவில்லை... இது குறித்து மாங்காடு போலீஸார் விசாரிக்க மறுக்கிறார்கள். நான் போலீசுக்கு போய்விட்டேன் என்று தெரிந்ததும், என் மாமனார் தலைமறைவாக இருக்கிறார்.. அவரை கைது செய்ய வேண்டும்.. சரியான தண்டனை தர வேண்டும்" என்றார்.. நடிகையின் இந்த குற்றச்சாட்டும், அவரது ரணங்கள், காயங்கள், தழும்புகள் அடங்கிய முகமும், பெரிதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

 நிர்வாணம்

நிர்வாணம்

இவர் பேட்டி வெளியாகி கொண்டிருக்கும் அதே நேரம், ஒரு வீடியோவும் வெளியானது.. அந்த வீடியோவில், நடிகையை அவரது மாமனார் விரட்டி விரட்டி தாக்குவது பதிவாகி இருந்தது.. நடிகையின் பேட்டியும், தாக்கும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியானதையடுத்து, மாங்காடு போலீசாரால் அந்த புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது... நடிகை கூறிய புகார் காரணமாக விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால், அதற்குள் மாமியாரும் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.. மாமனார், மாமியார் 2 பேரையும் இப்போது போலீசார் தேடி வருகிறார்கள்.

 மாமியார் - மாமனார்

மாமியார் - மாமனார்

உண்மையிலேயே இந்த சம்பவத்தின் பின்னணி என்ன??? சம்பந்தப்பட்ட நடிகைக்கு 37 வயதாகிறது.. 17 வருடங்களுக்கு முன்பு சுரேஷ்குமார் என்பவருடன் திருமணமாகி ஆனது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.. நடிகையை இந்த அளவுக்கு டார்ச்சர் செய்ய காரணம், அவர் சினிமாவில் நடிப்பது கணவன் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.. இதன் காரணமாகவே குடும்பத்தில் பலமுறை தகராறு நடந்திருப்பதாக சொல்கிறார்கள்.. அப்படித்தான் பிரச்சனை ஆரம்பத்தில் வெடித்துள்ளது.

மாமனார்

மாமனார்

ஒருமுறை மாமனாருக்கும் - நடிகைக்கும் கைகலப்பு வரை கூட இந்த தகராறு சென்றுவிட்டதாம்.. கணவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவருக்கு தற்போது சிகிச்சையும் நடந்து வருவதாக நடிகை சொல்கிறார்.. நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராம் மாமனார்.. கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவராம் மாமியார்.. அதனாலேயே 2 பேருக்கும் மருமகள், சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என்கிறார்கள்.. இதனிடையே, இன்னொரு பரபரப்பு குற்றச்சாட்டை நடிகை போரூர் மகளிர் ஸ்டேஷனில் தந்துள்ளார்..

 2 கேஸ்கள்

2 கேஸ்கள்

அதில், தன்னுடைய 15 வயது மகளிடம், மாமனார் சரவணவவேல் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் தந்துள்ளார்.. இப்போது 2 பாலியல் புகார், 73 வயதான மாமனார் மீது உள்ளதால், அவருக்கான பிடி இறுகி காணப்படுகிறது.. மாங்காடு போலீசார் தங்கள் தேடும் படலத்தையும் விரிவுபடுத்தி உள்ளனர்.. மாமனார், மாமியார் இருவரும் பிடிபட்டால்தான், இந்த வழக்கின் உண்மைத்தன்மை மேலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
actress ranjana case and Did the father in law sexually harass the actress, what happened பிரபல நடிகை, தன்னுடைய மாமனார் மீது பாலியல் புகார் தந்துள்ளது பரபரப்பை தந்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X