India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபல நடிகை அலறல்.. "தொட்டு பார்ப்பியா'.. ஜாக்கிரதை.. போலீசுக்கு ஒரே ஓட்டம்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தன் உயிருக்கு ஆபத்து என்று, ஒரு நடிகை போலீசுக்கு ஓடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பணம் சம்பாதிக்கவும், புகழ்பெறவும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைக்காகவும் எத்தனையோ பேர் ஹீரோயின்களாக உருவாகி உள்ளனர்.

சினிமாவில் நடித்தாலும், சமூக பிரச்சனைகளில் பலர் தலையிடுவது இல்லை.. எதையாவது சொல்ல போய், வம்பில் போய் முடிந்துவிடுமோ என்று பயந்து கொண்டு, அரசியல் விவகாரத்திலும் சரி, மத விவகாரங்களிலும் சரி, பெரும்பாலானோர் வாயே திறப்பது இல்லை.

 சாய் பல்லவி

சாய் பல்லவி

அப்படி இருந்தும் சில நடிகைகள், எதை பற்றியும் கவலைப்படாமல், துணிந்து பொதுவெளியில் கருத்துக்களை கூறுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது... அப்படி பேசி, பலரது ஆதரவையும் சமீபத்தில் பெற்றவர் நடிகை சாய் பல்லவி.. பாஜகவை விமர்சித்து, இஸ்லாமியர்களுக்கான ஆதரவுக் கரத்தை நீட்டியதால், பரபரப்பாகவும் இவர் பேசப்பட்டார்.. அந்த வகையில் இன்னொரு நடிகையும் துணிச்சலுக்கு பெயர் போனவர்.. அவர் பெயர் ஸ்வரா பாஸ்கர்..

 தாலிபன்கள்

தாலிபன்கள்

சமுதாயத்தில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் யாருக்கும் பயப்படாமல் கருத்துக்களை சொல்லி வருபவர்.. இவர் கூறும் சில கருத்துக்களால், சர்ச்சைகளிலும் சிக்கி கொள்வதும் உண்டு.. அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, ஒரு கருத்து சொன்னார்.. அதாவது தலிபான் தீவிரவாதிகளுடன், இந்துத்துவாவை ஒப்பிட்டு ஒரு பேட்டி தந்திருந்தார்.. "தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பதுபோலத்தான், இங்கேயும் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது"என்றார்.

இந்துத்துவா

இந்துத்துவா

இப்போது என்றில்லை.. ஸ்வரா பாஸ்கரை பொறுத்தவரை, இந்துத்துவாவை எதிர்க்கும் அதேசமயம், கம்யூனிஸ சித்தாந்ததை வலியுறுத்தியே எப்போதும் பேசுவது வழக்கம்.. இப்படித்தான், அன்று ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தபோதும், அவருக்கு ஆதரவாக பேசி, பாஜக கடுப்பேற்றினார் ஸ்வரா.. இந்த முறை இந்துத்துவாவினர் இவர் பேச்சை கேட்டு கொந்தளித்துவிட்டனர்.. கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.. ஸ்வரா பாஸ்கரை கைது செய்யவேண்டும் என்று ஆவேசமாக சொல்லி வருகிறார்கள்..

 ஹிந்தி லெட்டர்

ஹிந்தி லெட்டர்

"இங்கே வாழ்வது ரொம்ப கஷ்டமாக இருந்தால், இதுக்கு பேசாமல், பாகிஸ்தான், பங்களாதேஷ் பக்கம் போகலாமே" என்று ஸ்வரா பாஸ்கரை கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும், ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டலும் வந்துள்ளதாம்.. யாரோ இவரை கொலை செய்வதாக கூறி, ஹிந்தியில் எழுதி ஒரு லெட்டரையும் அனுப்பியிருக்கிறார்களாம்.. அந்த கடிதத்தில், "வீர் சாவர்க்கரை இழிவுபடுத்துவதை நாட்டில் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று எழுதப்பட்டிருந்ததாம்..

 மர்ம நபர்

மர்ம நபர்

அந்த கடிதத்தை யார் எழுதியது? யார் அனுப்பியது என்று தெரியவில்லை.. அதனால், மும்பை போலீசில் இது தொடர்பாக புகார் தந்துள்ளார் நடிகை.. வேர்சோவா போலீஸ் ஸ்டேஷனில் அந்த கடிதத்தையும் ஆதாரமாக தந்துள்ளார்.. இதையடுத்து, போலீசாரும், அந்த மிரட்டல் கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. நடிகைக்கு, கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
actress swara bhasker filed a police complaint that she received threatening letter நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X