சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்‌ஷன் அதிமுக: தினகரனுக்கு செம டஃப்.. ஆர்.கே.நகரில் களம் இறங்குகிறார் விந்தியா.. திமுகவுக்கும் செக்

அதிமுக சார்பாக விந்தியா ஆர்கே நகரில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திக்கி திக்கி தமிழில் பேசி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நடிகை விந்தியாவுக்கு இந்த முறை தேர்தலில் சீட் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.. அதிலும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் விந்தியாவுக்கு சீட் தரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதிமுகவின் ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.. அதன்படி, எந்த எந்த கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படும் என்ற லிஸ்ட் தரப்பட்டுள்ளது...

அதில் பாஜகவுக்கு 20 சீட்டுக்களும்,பாமகவுக்கு 21 சீட்களும், தேமுதிகவுக்கு 14 சீட்டுகளும், தமாகாவுக்கு 5 சீட்டுகளும், மற்ற கட்சிகளுக்கு 3 சீட்டுகளும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. மிச்சம் உள்ள 171 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாக களமிறங்க போகிறது..

 லிஸ்ட்

லிஸ்ட்

இதில் ஒரு சீட் நடிகை விந்தியாவுக்கு ஒதுக்கப்படுகிறது.. ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கும்... அதில், குண்டுகல்யாணம், குண்டு ஆர்த்தி, நமீதா, விந்தியா, ராமராஜன், என்ற பெயர்கள் நீண்டு கொண்டே இருக்கும்.. தேர்தல் என்றாலே இவர்கள்தான் மக்களிடம் சென்று, அதிமுகவின் சாதனைகளையும், திமுகவின் குறைகளையும் எடுத்து சொல்லி வாக்கு சேகரிப்பார்கள்... இவர்கள் அனைவருக்குமே சரிசமமாக வாய்ப்புகளை வழங்குவார் ஜெயலலிதா!

விந்தியா

விந்தியா

ஆனால், பெரும்பாலானோர் நட்சத்திர பேச்சாளர்களாகவே இருந்துவிட்ட நிலையில், இவர்களில் சீட் கிடைப்பது என்பது அரிதான காரியம்.. அந்த வகையில் விந்தியாவுக்கு இப்போது கிடைத்துள்ளது.. ஜெயலலிதா மீது அளவு கடந்த அன்பு, பாசம், பற்று, மரியாதை காரணமாகத்தான் அதிமுகவில் தன்னை ஆரம்பத்தில் இணைத்து கொண்டவர் விந்தியா.. ஜெயலலிதா தன்னுடைய ரோல் மாடல் என்று விடாமல் சொல்லி கொண்டே இருப்பார்.

 ஜெயலலிதா

ஜெயலலிதா

பேச்சு, பிரச்சாரம் என்று எடுத்து கொண்டால், ஆரம்பத்தில் தட்டு தடுமாறிதான் தமிழில் பேசினார்.. தெலுங்கு வாடை அதிகமாக அடித்தாலும், விந்தியா பேச்சை அதிமுக தொண்டர்கள் ரசிக்கவே செய்தனர்.. ஜெயலலிதா இறந்த பிறகு, எத்தனையோ பேர் கட்சியில் இருந்து பிரிந்து போய்விட்டனர்.. பலர் கட்சி மாறிவிட்டனர்.. தாவி விட்டனர்.. ஆனால் விந்தியா, இப்போதும் அதிமுகவில் நீடிக்கிறார்.. எப்போது பிரச்சாரம் என்றாலும், சமாதிக்கு போய் ஜெயலலிதாவின் ஆசியை பெற்று கொண்டு களத்தில் இறங்குவது இவரது வாடிக்கை.

அரசியல்

அரசியல்

சமீபத்தில்தான், அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளர் என்ற பொறுப்பிலிருந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற புரோமோஷன் கிடைத்தது விந்தியாவுக்கு.. அரசியல், அதிகாரம், பணம் என எந்த பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்து, ஜெ.மீதான மரியாதையை இப்போதுவரை வைத்திருக்கும் அந்த சின்சியாரிட்டிக்குதான் விந்தியாவுக்கு சீட் தானாகவே தேடி வந்துள்ளது. இந்த வாய்ப்பை நிச்சயம் விந்தியா பயன்படுத்தி கொள்வார் என்று தெரிகிறது..!

அமமுக

அமமுக

அதுமட்டுமல்ல, ஆர்கே நகர் தொகுதி என்றாலே அமமுகவின் தினகரன்தான் கண்முன் வந்து நிற்கிறார்.. 15வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே அன்றைய தேர்தலில் வெற்றியாளராக கருதப்பட்டவர்.. திமுக, அதிமுகவை சடாரென்று பின்னுக்கு தள்ளிய நிலையில், இந்த முறை விந்தியாவை எதிர்த்து போட்டியிட போவது யார் என்று தெரியவில்லை.. சும்மாவே திமுகவை விந்தியா பந்தாடுவார்.. இப்போது நேரடியாக மோத போவதால், யாரெல்லாம் இவர் பேச்சில் சிக்கி சின்னாபின்னமாக போகிறார்களோ..!

English summary
Actress Vindhiya may contest in RK Nagar Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X