சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா

18 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விந்தியா பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் அதிமுக மேடைகளுக்கு பிரச்சாரத்திற்கு வருகிறார் விந்தியா- வீடியோ

    சென்னை: "திரும்பவும் வந்துவிட்டார் நடிகை விந்தியா.. வராத தமிழில் என்னவெல்லாம் பேசி மக்களிடம் ஓட்டு சேகரிக்க போகிறாரோ தெரியவில்லை!

    ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கும். குண்டுகல்யாணம், குண்டு ஆர்த்தி, நமீதா, விந்தியா, ராமராஜன், என பட்டியல் போய் கொண்டே இருக்கும்.

    தேர்தல் என்றாலே இவர்கள்தான் மக்களிடம் சென்று பேசி அதிமுகவுக்காக வாக்கு சேகரிப்பார்கள். அனைவருக்குமே சரிசமமாக வாய்ப்புகளை வழங்குவார் ஜெயலலிதா!

    வந்துவிட்டது.. நாளை முதற்கட்ட தேர்தல்.. எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறது தெரியுமா?

    நடிகை விந்தியா

    நடிகை விந்தியா

    ஆனால் இந்த முறை இதெல்லாம் மிஸ்ஸிங்! வேட்பாளர்களை ஆதரித்து ஆளுங்கட்சி தரப்பே முழு நேர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்த் லிஸ்ட்டில் இருந்து நடிகை விந்தியா திரும்பவும் களம் இறங்கி உள்ளார்.

    சூறாவளி பிரச்சாரம்

    சூறாவளி பிரச்சாரம்

    "தமிழகத்தில் நடைபெற உள்ள பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அதிமுக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான விந்தியா பிரச்சாரம் செய்வார்" என்று கட்சி தலைமையே அறிவித்துவிட்டது. எனவே 18 தொகுதிகளிலும் இன்றிலிருந்து விந்தியா இனி சூறாவளி பிரச்சாரம் செய்ய போகிறார்.

    "பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க".. கஸ்தூரி ஏடாகூட டிவீட்

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    முன்னதாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற விந்தியா, மண்டியிட்டு வணங்கி, பின்னர் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார். ஆனால் இவர் என்ன பேச போகிறார், எப்படி பேச போகிறார் என்றுதான் தெரியவில்லை. ஏனென்றால், போன தேர்தலில் விந்தியா பேசும்போது, "நாட்டுல என்ன நடக்குதுன்னே விஜயகாந்த்துக்கு தெரியல" என்றார். இப்போது அதே தேமுதிக அதிமுகவுடன் இணைந்துள்ளது.

    ஜாதி நோய்

    ஜாதி நோய்

    இதுவாவது பரவாயில்லை.. "ஆதாயத்துக்காக அணியை தேடக்கூடாது. சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் கட்சி மாறும் பச்சோந்தி பாமக. ராமதாஸ் கொள்கை காத்தோட போயாச்சு. பாச மகன் கட்சியாக இப்போ மாறி போச்சு. அவர் ஜாதி நோயை பரப்புரவரு ஜாக்கிரதையா இருங்க" என்று டாக்டர் ராமதாஸை சொன்னார்.

    தீவிர கவனம்

    தீவிர கவனம்

    போன முறை யாரையெல்லாம் கழுவி கழுவி ஊத்தினாரோ அவர்கள்தான் இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறார்கள். அதனால் விந்தியா பேச்சை கொஞ்சம் உன்னிப்பாகவே கவனிக்க வேண்டியதுதான்!

    English summary
    Actress Vindhya campaings for 18 ADMK Candidates in Tamil nadu by election 2019
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X