வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? மாற்ற வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெற போகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொள்ள போகிறது. இதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது,.

இந்நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் முக்கிய ஆலோசனை
அப்போது சத்யபிரத சாகு கூறுகையில். கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளோம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக நவம்பர் 21,22 மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது" என்றார்.