சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அதை" பார்த்துட்டீங்களா.. ஆஹா.. மாட்டப் போறீங்க.. லிஸ்ட் ரெடியாகி வருதாம்.. கூடுதல் டிஜிபி தகவல்

ஆபாச வீடியோ பார்த்தவர்களின் லிஸ்ட் தயார் ஆகிறது என டிஜிபி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Mettupalayam issue | Nithyananda, Kailaasa Country | Vikram lander Chandrayaan 2

    சென்னை: மாட்ட போறாங்க.. யாரெல்லாம் ஆபாச வீடியோ பார்த்தார்களோ, அவங்க லிஸ்ட் தயார் ஆகி வருவதாக கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியிருந்தது. அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் நிறைய பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக போலீசாருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது.

    இதையடுத்து, தமிழகத்தில் யாரெல்லாம் ஆபாச படங்களை பார்க்கிறார்கள் என்ற விசாரணையை நடத்தவும் முடிவு செய்தது. இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி சொன்னதாவது:

    லிஸ்ட் ரெடி

    லிஸ்ட் ரெடி

    ''சிறுமிகளை வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் 3 நாட்களில் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம்.

    போக்சோ

    போக்சோ

    ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், தகவல் தொழில் நுட்பம் மற்றும், 'போக்சோ'வில் கைது செய்யப்படுவர். 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்.

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    தமிழகத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்த்தவர்கள் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னையில்தான் அதிகம் பேர், பெண்கள், குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான வீடியோக்கள், படங்களை பார்த்தனர் என்பதையும் கண்டுபிடித்துள்ளோம்.

    விரைவில் கைது

    விரைவில் கைது

    அவர்களின் போட்டோ, அட்ரஸ் உள்ளிட்ட விபரங்களை, அவர்களது வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்க போகிறோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.. அவர்களுக்கு, கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.

    English summary
    tamilnadu additional dgp ravi explains action against child pornography
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X