சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. !

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணி கட்சிகள் முடிவாகிவிட்ட நிலையில், அதிமுக உத்தேச தொகுதி பட்டியல் ஒன்று கசிந்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள தொகுதிகள் குறித்துத்தான் தற்போது அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் தலைவர்கள் விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாசம் 18-ந்தேதி எம்பி தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் அணி திரண்டு விட்டன. அந்தஅணிகளுக்கான தொகுதிகள், வேட்பாளர் பட்டியல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ADMK and Alliance competition list

அதிமுக அணியில், பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

லெஸ்பியனா இருக்கலாமா.. சென்னை பெண் டாக்டரை பேசியே மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்! லெஸ்பியனா இருக்கலாமா.. சென்னை பெண் டாக்டரை பேசியே மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்!

இதில், பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜக 5, தேமுதிக 4 தொகுதிகள், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என தெரிகிறது. இந்தநிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொகுதிகளின் உத்தேச பட்டியல் ஒன்று கசிந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

அதிமுக = 20 தொகுதிகள்

1 தென்சென்னை
2 காஞ்சீபுரம் (தனி)
3 திருவண்ணாமலை (தனி)
4 சேலம்
5 நாமக்கல்
5 ஈரோடு
7 திருப்பூர்
8 நீலகிரி (தனி)
9 பொள்ளாச்சி
10 கிருஷ்ணகிரி
11 திண்டுக்கல்
12 கரூர்
13 பெரம்பலூர்
14 சிதம்பரம் (தனி)
15 நாகப்பட்டினம் (தனி)
16 மயிலாடுதுறை
17 மதுரை
18 தேனி
19 விருதுநகர்,
20 திருநெல்வேலி

பாமக = 7

21 மத்திய சென்னை
22 ஸ்ரீபெரும்புதூர்
23 அரக்கோணம்
24 தர்மபுரி
25 ஆரணி
26 விழுப்புரம் (தனி)
27 கடலூர்

பாஜக = 5

28 கோயம்புத்தூர்,
29 சிவகங்கை
30 ராமநாதபுரம்
31 தூத்துக்குடி
32 கன்னியாகுமரி

தேமுதிக = 4

33 வடசென்னை
34 கள்ளக்குறிச்சி
35 திருச்சி
36 விருதுநகர்

37. என்.ஆர்.காங்கிரஸ் - புதுச்சேரி.

38- த.மா.கா. - தஞ்சாவூர்

39. புதிய தமிழகம் - தென்காசி

40., புதிய நீதிக்கட்சி - வேலூர்

என்று அந்த பட்டியல் வட்டமடித்து வருகிறது. இது அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதியான பட்டியல் இல்லை என்றாலும் ஓரளவு இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகள் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்றைக்குள் தொகுதிகள் முடிவாகி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

English summary
ADMK and its Alliance volume distribution is finally
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X