சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டா தொகுதிகள் பங்கீடு.. சைலண்ட்டாக தள்ளிவிட்ட அதிமுக.. உள்ளூர 'குமுறும்' கூட்டணி கட்சிகள்

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகாரப்பூர்வமற்ற, உத்தேச பட்டியல் என்ற தலைப்பில் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியல் வலம் வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தொகுதி விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று சமூக தளங்களில் வெளியாகியுள்ள உத்தேச தொகுதிகள் பட்டியலில் டெல்டா பகுதி தொகுதிகளை அதிகம் கைவசம் வைத்திருக்கும் கட்சி குறித்து பார்க்கலாம்.

 32 தொகுதிகளில்

32 தொகுதிகளில்

நிச்சயம், இதில் பெரிய ஆச்சர்யம் இருக்க வாய்ப்பில்லை. யெஸ்.. ஏறக்குறைய அதிமுக வசம் தான் டெல்டா முழுமையாக உள்ளது.

  • ஒரத்தநாடு
  • கரூர்
  • மணப்பாறை
  • ஸ்ரீரங்கம்
  • திருச்சி கிழக்கு
  • மணச்சநல்லூர்
  • முசிறி
  • பெரம்பலூர் (தனி)
  • குன்னம்
  • அரியலூர்
  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • கீழ்வேளூர் ( தனி)
  • வேதாரண்யம்
  • நன்னிலம்
  • கும்பகோணம்
  • தஞ்சாவூர்
  • பேராவூரணி
  • விராலிமலை
  • திருமயம்
  • ஆலங்குடி
  • கிருஷ்ணராயபுரம் (தனி)
  • குளித்தலை
  • திருச்சி மேற்கு
  • துறையூர் (தனி)
  • சீர்காழி
  • பூம்புகார்
  • திருத்துறைப்பூண்டி (தனி)
  • திருவிடை மருதூர் (தனி)
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை
  • அறந்தாங்கி
  • ஆகிய 32 டெல்டா சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக களம் காண்கிறது அதிமுக. இதில் தஞ்சை, ஒரத்தநாடு, கும்பகோணம், நன்னிலம், வேதாரண்யம் உள்ளிட்ட பல மிக முக்கியமான டெல்டா சட்டமன்ற தொகுதிகளில் எப்போதும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும். இங்கே, மற்ற கட்சிகள் ஓரளவுக்கு வாக்குகள் பெற்றாலே அது அவர்களுக்கு பெரிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

 கட்சியினர் அதிருப்தி?

கட்சியினர் அதிருப்தி?

இந்த பட்டியலில் அடுத்தபடியாக, நான்கு டெல்டா தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

  • ஜெயங்கொண்டம்
  • அரவக்குறிச்சி
  • மன்னார்குடி
  • பாபநாசம்
  • வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஓரளவுக்கு வலிமையாக உள்ள பாபநாசம் தொகுதி, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது நிச்சயம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கூட்டணியில் உள்ள வாசனுக்கு பாபநாசம் ஒதுக்கப்படவில்லை. அதேபோல், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ஆதிக்கம் நிறைந்த மன்னார்குடி தொகுதியிலும் பாமகவுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

 திருவாரூர் எதற்கு?

திருவாரூர் எதற்கு?

இதில், பாஜக போட்டியிடும் டெல்டா தொகுதிகள் தான் ஹைலைட்.

திருவாரூர் மற்றும் திருவையாறு ஆகிய இரு டெல்டா தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 25 வருடங்களாக திமுகவின் கோட்டையாக இருக்கும் திருவாரூர் தொகுதியை உத்தேச தொகுதிகள் பட்டியலின்படி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தலைகீழாக நின்றாலும், பாஜக ஜெயிப்பது கடினம் என்றே கூறலாம். 'அவுட் ஆஃப் பாக்ஸ்' சிந்திக்கலாம் என்றால் கூட அதற்கும் சாத்தியமில்லை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் நின்று இருமுறை வெற்றிப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வாசனுக்கு பட்டுக்கோட்டை

வாசனுக்கு பட்டுக்கோட்டை

தேமுதிகவுக்கு லால்குடி தொகுதியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பட்டுக்கோட்டை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டிக் கழித்து பார்க்கும் பொழுது, திமுக வெற்றிப்பெற அதிகம் வாய்ப்புள்ள டெல்டா தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக தள்ளி விட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

எனினும், தொகுதி பங்கீடு பட்டியல் குறித்து அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே அனைத்தும் இறுதியாகும்.

English summary
admk alone to contest 32 seats in delta assembly constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X