சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சித்தி 2" ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. "சின்னம்மா" வரபோறது எப்பப்பா.. அதிமுக, அமமுக, பாஜக வெயிட்டிங்!

சசிகலா விடுதலையை எதிர்நோக்கி கட்சிகள் காத்து கொண்டுள்ளன

Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா சிறையிலிருந்து உரிய நேரத்தில் வருவார்- டிடிவி தினகரன் பேட்டி

    சென்னை: சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்று காத்து கொண்டிருக்கிறது அதிமுக மட்டுமல்ல.. பாஜகவும்தான்.. டிடிவி தினகரனும்தான்.. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால், நிலைமை இப்படி ஆகிவிட்டது!

    சிறையில் உள்ள சசிகலா 2021 வரை தண்டனை காலம் உண்டு. ஆனாலும் நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை ஆவார் என்று சொல்லப்பட்டு வருகிறது.. ஆனால் சமீபத்தில் இன்கம்டாக்ஸ் தாக்கல் செய்த ஆவணங்கள் இவரது விடுதலைக்கு முன்கூட்டியே முட்டுக்கட்டை ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    சிறைக்கு செல்லும் முன்பும் சரி, இப்போதும் சரி, அமமுக என்ற கட்சியே சசிகலா நேரடியாக அறியாத ஒன்று.. இந்த காலகட்டத்தில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள், சரிவுகள், தோல்விகள், வீழ்ச்சிகள், ஏமாற்றங்களை அமமுக சந்தித்தது.

     விரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள் விரிக்கப்படும் வலை.. சிக்குமா திமுக.. கவலையில் காங்.. உள்ளே புகுந்து அள்ள காத்திருக்கும் கட்சிகள்

    சித்தி உதவுவார்

    சித்தி உதவுவார்

    இந்த புதுவருடம்தான் அக்கட்சிக்கு சற்று ஏற்றத்தை தந்துள்ளது. பல கட்ட போராட்டத்துக்கு பிறகு, நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற குறிப்பிட்ட வெற்றியினை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தினகரன் பிளான் செய்து வருகிறார்.. விடுதலையாகி வந்துவிட்டால், கட்சியின் வளர்ச்சிக்கு சித்தி பெரிதும் உதவுவார் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

    பெரிய சரிவு

    பெரிய சரிவு

    எனினும், நடந்து கொண்டிருப்பதோ வேறு.. சசிகலாவின் விடுதலையை வைத்து ஆளும் தரப்பு ஒரு கணக்கை போட்டு வருகிறதாம்.. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என்று பொத்தாம்பொதுவாக எடுத்து கொண்டாலும், இப்படி திணறி, திணறிதான் வெற்றி கிடைத்துள்ளது ஆளும் கட்சிக்கு பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.. தங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு திமுக உள்ளது என்ற அதிர்ச்சி அதிமுகவை பீடித்து கொண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் எம்எல்ஏ தேர்தலை சந்திக்க முடியாது என்ற கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

    ஓபிஎஸ் - ஈபிஎஸ்

    ஓபிஎஸ் - ஈபிஎஸ்

    அது மட்டுமல்ல, கட்சிக்குள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பனிப்போர் அதிகமாகி வருகிறதாம்.. ஆண்டுதோறும் கட்சி சார்பாக அச்சிட்டு வெளிவரும் காலண்டரில்கூட யார் படம் இடம்பெறுவது என்ற பிரச்சனை மறைமுகமாக ஓடிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.. இதே நிலை நீடித்தால் கட்சி பலவீனமடைந்து, அது சட்டமன்ற தேர்தலின்போது பெரிய மைனஸாகிவிடும் என்ற பீதியும் உள்ளது.

    சசிகலா

    சசிகலா

    அதனால் விரிசல் விழுந்த கட்சியை ஒன்றிணைக்கவும், வலுப்படுத்தவும் சசிகலா என்ற மிகப்பெரிய ஆளுமையால்தான் முடியும் என்று அதிமுக ஆழமாக நம்புகிறது.. எனவேதான் சசிகலா விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கிறது... எனினும் இதை தினகரன் எப்படி எடுத்து கொள்வார் என்று தெரியவில்லை.. ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவுடன் கூட்டு இல்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார்.. இதே நிலைப்பாடுதான் அதிமுகவுக்கும் உள்ளது. "அந்த ஒருத்தரை" தவிர யார் வேண்டுமானாலும் எங்களுடன் வரட்டும் என்று அதிமுக பிடிவாதமாக இருக்கிறது.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    சசிகலாவை வைத்து, தினகரனும், அதிமுகவும் இப்படி ஒரே யோசனையில் உள்ளதென்றால், பாஜகவும் தனியாக ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியை பாஜகவால் ஜீரணிக்கவே முடியவில்லை.. ரஜினியை முழுசாக நம்பிக் கொண்டு இருந்தாலும், அதன் பலனை இன்னும் அறுவடை செய்ய முடியாமல் பாஜக தவித்து வருகிறது. அதனால் சசிகலா விடுதலையில் கூடுதல் அக்கறை காட்ட துவங்கி உள்ளது. இப்படி ஒரு மாஸ்டர் பிளானைதான் சு.சாமி போன வருடமே செயல்படுத்த துவங்கினார்.

    முக்கிய பொறுப்பு

    முக்கிய பொறுப்பு

    இப்போது, திமுக பலம்வாய்ந்து வருவதால், அதனை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவை வீழ்த்த அதிமுகவை சரிக்கட்ட வேண்டும், அதற்கு அதிமுகவை பலப்படுத்த வேண்டும், இது சசிகலாவால்தான் முடியும் என்று பாஜக நம்புகிறது. ஒருவேளை அதிமுக - பாஜக இணைப்புக்கு தினகரன் சம்மதிக்கவில்லை என்றாலும், முக்கிய பொறுப்பை டெல்லியில் கொடுப்பது என்றும் யோசிக்கப்பட்டு வருகிறதாம்.. ஆனால், இதற்கு தினகரன் சம்மதிப்பாரா என்று தெரியவில்லை.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ஆக... சசிகலா விடுதலையை அதிமுக ஒரு பக்கம், பாஜக இன்னொரு பக்கமும், தினகரன் மற்றொரு பக்கமும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. சசிகலாவின் விடுதலை யாருக்கு சாதகமாக போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    admk, ammk and bjp await for sasikala release and They are planning to strengthen their parties with Sasikala
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X