சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டபுள் மீனிங்" பேசுகிறார்.. விடாமல் ஸ்டாலினை விரட்டி வரும் அப்சரா.. கொளத்தூரில் போட்ட சபதம்

ஸ்டாலின் தொகுதியில் அப்சரா ரெட்டி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "இதே கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தோற்கடிப்பேன்" என்று அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன.. இதற்காக கூட்டணி கட்சிகளிடம் தொகுதி உடன்படிக்கை, சீட் ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் மும்முரமாகி வருகின்றன..

இந்த முறையும் திமுக, அதிமுகவும் நேரடியாக மோதி கொள்கின்றன.. இரு கட்சிகளுமே விருப்ப மனுவை பெற்று வருகின்றன.

 விருப்ப மனு

விருப்ப மனு

அந்த வகையில், அதிமுகவில் பலரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.. ஆனால், இதில் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கம் என்று தெரியவில்லை.. இதில், அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டியும் ஒருவர்.. இவரும் இன்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.. இவர் முக ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

 கிராம சபை

கிராம சபை

ஏற்கனவே, ஸ்டாலினை பலமுறை விமர்சித்தவர் அப்சரா ரெட்டி. "கிராம சபையை ஸ்டாலின் நடத்திட்டு வர்றாரு.. கிராம சபையில் மொத்தமா திமுக உறுப்பினர்களையே உட்கார வைக்க ட்ரை பண்றார்.. ஏன் பாமர மக்கள் அவரை கேள்வி கேட்க கூடாதா? ஒரே கல்லுல நிறைய மாங்காய் அடிச்சிட்டோம்னு சொல்றது? இவ்ளோ பெண்களை பார்க்கறது சந்தோஷமா இருக்குன்னு ரெட்டை அர்த்தத்துல நிறைய பேசறார் ஸ்டாலின்.

 உதயநிதி

உதயநிதி

அந்த கட்சியில் இருக்கிறவங்களுக்கு பெண்களை சுத்தமா மதிக்க தெரியாது..பிச்சையில் மேடை ஏறி பேசறார்.. இந்த வாரிசு அரசியல் மட்டும் இல்லேன்னா இன்னைக்கு உதயநிதி ஸ்டாலின் எங்கே இருப்பார்? உதயநிதி என்ன எல்லா ஆண்களையும் அவங்க அப்பா, தாத்தா மாதிரி நினைச்சுட்டாரா? கவர்ச்சியாக பேசலாம்? இதெல்லாம் கண்டிக்கக்கூடிய விஷயங்கள்." என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தவர். இப்போது கொளத்தூரிலேயே ஸ்டாலினை எதிர்கொள்ள விருப்ப மனு அளித்துள்ளார்.

 சபதம்

சபதம்

விருப்ப மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் அப்சரா பேசும்போது, 'அரசியலில் சாதிக்க பாலினம் ஒரு தடை இல்லை.. மக்களுக்கு நல்லது செய்வதுதான் நோக்கம்.. திமுக எனும் தீய சக்தியை தோற்கடிக்கவும், ஸ்டாலினை தோற்கடிக்கவும்தான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன்.. திமுக லாப்டாப்பில் அரசியல் செய்து வருகிறது.. இதே சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தால், நிச்சயம் போட்டியிட்டு ஸ்டாலினை வீழ்த்துவேன்" என்றார்.

English summary
ADMK Apsara Reddy targets MK stalin in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X