சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரணியை கேட்டும் அதிமுக தரலையா.. இல்லை பாமக விருப்பம் காட்டலையா.. நடந்தது என்ன

Google Oneindia Tamil News

Recommended Video

    தொகுதி ஒதுக்கீட்டில் திருப்தியடையாத தேமுதிக, பாமக ?

    சென்னை: ஒரே தொகுதியில் எதிரெதிராக களமிறங்கினால் மாமனுக்கும், மச்சானுக்கும் இருக்கும் விரிசல் அதிகம் ஆகிவிடுமோ என பாமக தரப்பில் ஒரு பீதி நிலவி வந்தது... நல்லவேளை அதை அதிமுக தவிர்த்துவிட்டது!

    அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தபோதே அனைவருக்கும் இருந்த அதிர்ச்சியைவிட அதிகமாக ஷாக் ஆனது அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்தான்! அடுத்தடுத்த சில பேட்டிகளால் இவர்களிடையே மனஸ்தாபங்களும் அதிகமானது.

    ஆரணி தொகுதியானது.. வட மாவட்டம், வன்னியர்கள் ஆதிக்கம், ராமதாசின் செல்வாக்கு.. இதையெல்லாம் கணக்குபோட்டுதான் ஆரணி பாமகவுக்கு ஒதுக்கப்படும் என திமுக கணக்கு போட்டது. வலுவான வட மாவட்டம் என்பதால், அத்தொகுதியில் நாம் போட்டியிட வேண்டாம் என்று திமுக நிர்வாகிகளே கோரிக்கையாக வைத்தார்களாம்.

    சாருபாலா தொண்டைமான் ஈஸியா ஜெயிக்க வாய்ப்பு.. காரணம் திமுக, அதிமுக.. செம சுவாரஸ்யம்! சாருபாலா தொண்டைமான் ஈஸியா ஜெயிக்க வாய்ப்பு.. காரணம் திமுக, அதிமுக.. செம சுவாரஸ்யம்!

    மனஸ்தாபங்கள்

    மனஸ்தாபங்கள்

    "பாமகவோட நாம் கூட்டணி வைக்கவில்லை, இதைதவிர வேறு சில மனஸ்தாபங்களும் திமுகவினர் மீது பாமக தொண்டர்களுக்கு உள்ளது. அதனால் வன்னியர் ஓட்டுக்கள் நமக்கு கிடைப்பதே கஷ்டம். பேசாமல் கூட்டணி கட்சிக்கு யாருக்காவது ஆரணியை ஒதுக்கிவிடுங்கள்" என்று திமுக தரப்பில் யோசனை சொல்லப்பட்டதாம். அதனால் இந்த தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கினால், அங்கு விஷ்ணு பிரசாத்தை நேரடியாக களமிறக்க ஸ்டாலின் திட்டமிட்டதாக கூறப்பட்டது.

    வலுவான ஓட்டுக்கள்

    வலுவான ஓட்டுக்கள்

    ஆனால் மற்ற தொகுதிகளை கேட்டு அடம்பிடித்த பாமக, ஆரணி விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தது. கடந்த தேர்தலில் வலுவான ஓட்டுக்களை பெற்றிருந்த போதிலும் இப்போது அதிமுகவிடம் ஆரம்பம் முதலே இந்த தொகுதியை கேட்காமல் இருந்தது. காரணம் விஷ்ணுபிரசாத் இங்கு போட்டியிட வாய்ப்பிருக்கும் என்பதால்தான்.

    விஷ்ணுபிரசாத்

    விஷ்ணுபிரசாத்

    விஷ்ணுபிரசாத்துக்கு ஆரணியில் செல்வாக்கு உள்ளது. இவரை வேட்பாளராக நிறுத்தினால் வன்னியர் ஓட்டுக்கள் சரிசமமாக பிரியும் வாய்ப்பு உள்ளது. இதுபோக மத்திய, மாநில அரசுகள் மீதான கோபம் திமுக-காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக வேல்முருகன் சப்போர்ட்டும், அவர் மூலமாக காடுவெட்டி குருவின் சப்போர்ட்டும் ரொம்ப சுலபமாக விஷ்ணுபிரசாத்துக்கு கிடைக்கும் சான்ஸ் உள்ளது!

    மிரண்ட பாமக

    மிரண்ட பாமக

    இதெல்லாம் பார்த்துதான் பாமக தரப்பு மிரண்டு போனதாம். கடைசியில் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்த அதிமுக தானே நேரிடையாக இங்கு களமிறங்குவதாக அறிவித்துள்ளதாக காரணம் சொல்லப்படுகிறது. மற்றொன்று ஆரணியை கேட்டும் அதிமுக தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. நிஜ காரணம் எதுவென தெரியவில்லை.. ஆனால் "குடும்பத்தில் குழப்பம், சிக்கல் இல்லாமல் போனதே எங்களுக்கு நிம்மதி" என்கிறார்கள் பாமக தொண்டர்கள்!

    வெற்றி யாருக்கு?

    வெற்றி யாருக்கு?

    எப்படி பார்த்தாலும், ஆளும் கட்சியின் பண பலம், அதிகார பலத்தையும் இரண்டையுமே அதிமுக தொகுதிக்குள் இறக்கும்நிலையில், இதை எதிர்கொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

    English summary
    In the Arani constituency ADMK is contesting instead of PMK. Thus the family problem in PMK has been avoided
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X