சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரம்பிச்சாச்சு.. 25 சதவீதமா?.. கறார் பாஜக.. பிடிகொடுக்காமல் நழுவும் அதிமுக.. என்ன நடக்கிறது?

அதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியிலேயே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்காக பிரதான கட்சிகளும் மும்முரமாகி உள்ளன.. வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணியுடன் போட்டியா? அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து, தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன..

அதன்படி, பாமக தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.. அதேபோல, தேமுதிகவும் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது. மக்கள் நீதி மய்யமும் தயாராகிவிட்டது.. கமலும் பிரச்சாரத்தை விரைவில் துவக்குகிறார்.

"இது திமுக ஆட்சி.. பாஜக தலைகீழாக நின்றாலும்.. அதுக்கு வாய்ப்பே இல்லை".. திருமாவளவன் மீண்டும் கறார்

பாஜக

பாஜக

திமுக கூட்டணி களமிறங்கிவிட்டது.. காங்கிரஸ் கட்சியும் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது.. மதிமுக திமுக கூட்டணியில்தான் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என்று வைகோ உறுதிசெய்துவிட்டார்.. மற்றொருபுறம் பாஜக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், அதே கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது..

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

பாமகவை தவிர்த்து கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அறிவித்துவிட்டார்.. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இறுதியாக, உறுதியாக எட்டப்படவில்லை என்றே கூறப்படுகின்றன... இப்போது என்றில்லை, கடந்த முறை சட்டமன்ற தேர்தலின்போதும், மற்ற கட்சிகள் கூட்டணியில் முடிவு எட்டப்பட்ட நிலையில், பாஜக - அதிமுக இடையே மட்டும் இழுபறி நீடித்தது..

வேட்பாளர்

வேட்பாளர்

முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று தமிழக பாஜக பிடிவாதம் பிடித்து வந்தது.. அதேபோல சீட் விவகாரத்திலும் கறார்தன்மையை வெளிப்படுத்தி கொண்டே இருந்தது.. 70 சீட் வரை கேட்டவர்கள், கடைசியில் அதிமுக ஒதுக்கும் சீட்டுகளை பெற வேண்டிய நிலைமைக்கு பாஜக ஆளானது.. இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் சுமூக முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது.. ஆனால், கடந்த 2 மாதங்களாகவே, அதிமுகவுடன் இணைந்துதான் பாஜக போட்டியிடும் என்று எல்.முருகன் முதல் அண்ணாமலை வரை உறுதிபடுத்தியபடியே வந்துள்ளனர்.

 மத்திய அரசு

மத்திய அரசு

"மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். எனவே கூட்டணியில் விட்டு கொடுத்து செல்வோம்... சுமூகமான முறையில் கூட்டணி இடபங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது... உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

இப்போது இது தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இறங்கி உள்ள நிலையில்தான், இடபங்கீட்டு விஷயத்தில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, மாவட்ட அளவில் இட ஒதுக்கீடு செய்யும் பேச்சு, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது... தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை அதிமுக தரப்பிடம் தமிழக பாஜக நிர்வாகிகள் வழங்கினர்...

 மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

எனினும், பாஜக கேட்கிற இடங்களை தருவதற்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் சம்மதிக்கவில்லை என்றே தெரிகிறது.. இதையடுத்து, அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று மறுபடியும் இடப்பங்கீடு பேச்சு நடந்தது.. அப்போது, 25 சதவீத இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கேட்டதாக தெரிகிறது...

 பங்கீடு விவரம்?

பங்கீடு விவரம்?

ஆனால், இதில், இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.. இந்த விஷயத்தில் உறுதியானால்தான், இட ஒதுக்கீடு விபரம் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.. ஆனால், தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தாலும், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது என்ற முனைப்பில் உள்ளது.. எப்படியும் இந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்திலும் களம் இறங்கி உள்ளது.

English summary
ADMK BJP Local Body election alliance and seat share discussion going on
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X