சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வட போச்சே... குமுறும் அதிமுக நிர்வாகிகள்.. குடுமி பிடி சண்டை.. மறுபக்கம் பாஜக பிரஷர் வேற!

முக்கிய தொகுதிகள் கையை விட்டு போனதால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    20 தொகுதிக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது

    சென்னை: வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்ததில் இருந்தே பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறார்கள்!

    கடந்த வருட இறுதிவரை அதிமுகவுக்கு மக்கள் மேல் இருந்த அதிருப்தி, பொங்கல் சமயத்தில் வேறு மாதிரியாக மாற ஆரம்பித்து விட்டது. முதலில் 1000 ரூபாய் பொங்கல் பணம், 2000 ரூபாய் இலவச திட்டம், சட்டப்பேரவையில் விவசாயத்துக்கு அதிரடி அறிவிப்புகள் என எதைஎதையோ செய்து மக்களின் மனதையே ஓரளவு மாற்றி விட்டார்கள்.

    இது மற்ற கட்சிகள் அதிமுகவை தேடி வந்து கூட்டணி பேசும் நிலைமைக்கும் உயர்த்தியது. மெகா கூட்டணியும் உருவானது. இதனால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற பிம்பமும் எழ ஆரம்பித்தது. ஆனால் எப்போது வேட்பாளர்களை அறிவித்தார்களோ அப்போதே எல்லாமே நொறுங்கி போய்விட்டது!

    "அம்மா" ஒதுக்கி ஓரம் கட்டிய 'அக்ரி'.. எப்படி ஓட்டு போடுவது.. குழப்பத்தில் திருவண்ணாமலை அதிமுக!

    சிவகங்கை

    சிவகங்கை

    உட்கட்சி பூசலால் அதிமுக தலைமை சிக்க உள்ளதை நினைத்து நிர்வாகிகளே வருத்தப்படுகிறார்களாம். பாஜக அதிமுகவுக்கு அழுத்தம் தந்து சில தொகுதிகளை பிடிவாதமாக வாங்கி சென்றுவிட்டது. இதில் நிறைய வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அடக்கம். அதாவது ராமநாதபுரமும், சிவகங்கையும், அதிமுகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிதான். ஆனால் 2 தொகுதிகளும் பாஜகக்கு போய்விட்டது.

     நத்தம் விஸ்வநாதன்

    நத்தம் விஸ்வநாதன்

    இதுபோலதான் திண்டுக்கல்லும் பாமகவுக்கு போய்விட்டது. இதற்கு காரணம் மருமகனுக்கு தொகுதி வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதனும், மகனுக்கு சீட் வேண்டும் என்று திண்டுக்கல் சீனிவாசனும் இரண்டு கோஷ்டிகளாக உருவாகி சீட் கேட்டு தலைமையை நெருக்கியதுதான்!

     அன்வர்ராஜா

    அன்வர்ராஜா

    ராமநாதபுரத்திலும் இதே நிலைமைதான்! அன்வர்ராஜா ஒரு கோஷ்டி, மாவட்ட செயலாளர் முனியசாமி ஒரு கோஷ்டி, அமைச்சர் மணிகண்டன் ஒரு கோஷ்டி.. என 3 கோஷ்டிகள் சேர்ந்து அதிமுகவை நெருக்கியது. ஆளுக்கு ஒரு பக்கம் சீட் கேட்கவும், பூசலை தவிர்க்க பாஜகவுக்கு தொகுதியை தந்தது அதிமுக!

    புலம்பல்

    புலம்பல்

    நாம போட்ட சண்டையால்தானே தொகுதி கைமீறி போய்விட்டது என்று சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரனும், மாவட்ட செயலாளர் எம்பி செந்தில்நாதனும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம். இதேபோலதான், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் போய்விட்டதே என்று ராமநாதபுர மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், கோஷ்டி மோதலால் ஒரு வரலாறே இன்று தலைகீழாக பாமகவுக்கு போய்விட்டதே என்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்களாம்!

    குடுமிப்பிடி

    குடுமிப்பிடி

    இவர்கள் எல்லாரையும்விட அதிகமாக இடிந்துபோய் உள்ளது அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்கள்தானாம்!ஒரு பக்கம் கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டை.. இன்னொரு பக்கம் பாஜக அழுத்தம்.. இதனால் பரிச்சயமான தொகுதிகள் எல்லாம் பிச்சிக்கிட்டு போய்டுச்சே என்று அதிகமாக நொந்து கொண்டுள்ளது அதிமுக தொண்டர்கள்தானா!

    English summary
    It is said that AIADMK executives are depressed because Important Consitutions are left out of hand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X