சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டு ஓ.பி.எஸ். தி கிரேட் எஸ்கேப்- நீடிக்கும் சஸ்பென்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அறிவித்தபடி செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். இதனால் அதிமுகவின் உட்கட்சி மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நானே என ஒற்றைக்காலில் நிற்கிறார் ஓபிஎஸ். ஆனால் களநிலவரம் அனைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கிறது.

அடுத்த முதல்வர் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான்... ஓபிஎஸ்-க்கு திண்டுக்கல் சீனிவாசன் நோஸ் கட் அடுத்த முதல்வர் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான்... ஓபிஎஸ்-க்கு திண்டுக்கல் சீனிவாசன் நோஸ் கட்

ஓபிஎஸ் ஆதங்கம் ஏன்?

ஓபிஎஸ் ஆதங்கம் ஏன்?

அதிமுகவின் பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர் இரண்டுமே எடப்பாடி தரப்புக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் அதிமுகவில் தமக்கான எதிர்காலம் அவ்வளவுதான் என முடிவு செய்துதான் இத்தனை களேபரங்களை ஓபிஎஸ் நிகழ்த்தி வருகிறார்.

ஓபிஎஸ் ராஜினாமா நாடகம்

ஓபிஎஸ் ராஜினாமா நாடகம்

இதன் உச்சகட்டமாக பதவியை ராஜினாமா செய்து ஒருநாடகமாடுவது எனவும் ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால் கேபிமுனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் ராஜினாமா எனும் ஓரங்க நாடகத்தை ஒத்திவைத்திருக்கிறார் ஓபிஎஸ்.

பிரஸ் மீட் அறிவிப்பு

பிரஸ் மீட் அறிவிப்பு

இதனையடுத்துதான் செய்தியாளர்களை சந்திக்கப் போகிறேன் என ஓபிஎஸ் வீசிய அடுத்த அணுகுண்டு. இதன்மூலம் எனக்கு கட்சியில் என்னதான் கிடைக்கும்? என்பதை தெளிவாக சொல்லுங்கள் என எடப்பாடி தரப்புக்கு காலக்கெடு விதித்திருந்தார் ஓபிஎஸ்.

நடக்கும் என்பார் நடக்காது!

நடக்கும் என்பார் நடக்காது!

இந்நிலையில் ஓபிஎஸ் தான் அறிவித்தபடி இன்று செய்தியாளர்களை சந்திக்கவில்லை. சென்னை அடையாறு சிவாஜிகணேசன் மணிமண்டபத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால் செய்தியாளர்களை ஏறெடுத்து பார்க்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார் ஓபிஎஸ். இதனால் அதிமுகவின் உட்கட்சி மோதல் குறித்த சஸ்பென்ஸ் தொடர் கதையாகிவருகிறது.

English summary
TN Deputy Chief Minsiter O Panneerselvam may meet Press on today regarding the CM Candidate issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X