• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'கொரோனா அதிகரிக்கிறது.. கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை.. கொஞ்சம் கவனியுங்க முதல்வரே' - ஓ.பி.எஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

தேசிய பேரிடர்‌ மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால்‌ அமைக்கப்பட்ட சிறப்புக்‌ குழுவின்‌ அறிக்கையில்‌ செப்டம்பர்‌, அக்டோபர்‌ மாதங்களில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றின்‌ மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள்‌ அதிகரித்துள்ளது என்றும்‌, நோய்த்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும்‌, தடுப்பூசி போடுவது தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும்‌ தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட அனைத்துக்‌ கடைகளும்‌ குளிர்‌ சாதன வசதி இல்லாது செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ வகையில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு தமிழ்நாடு அரசால்‌ விதிக்கப்பட்டது.

10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்?.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்! 10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்?.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்!

கடைகளில் கூட்டம்

கடைகளில் கூட்டம்

இருப்பினும்‌, தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டோர்‌ எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும்‌, பண்டிகை காலம்‌ என்பதால்‌, அனைத்து சில்லறை விற்பனை கடைகள்‌ முன்பும்‌, கொரோனா பாதிப்பிற்கு முன்‌ இருந்த கூட்டத்தை நெருங்கும்‌ அளவுக்கு மக்கள்‌ கூட்டம்‌ அதிகரித்து இருக்கிறது என்றும்‌, சிறப்பு அங்காடிகளில்‌ கொரோனா தொற்றுக்கு முன்‌ இருந்ததைவிட கூட்டம்‌ அதிகரித்துள்ளதாகவும்‌, இந்த ஆண்டு மே மாதம்‌ வெறிச்சோடி கிடந்த தெருக்கள்‌ தற்போது அலைகடல்‌ போல்‌ காட்சியளிப்பதாகவும்‌, வார இறுதி நாட்களில்‌ தங்குமிடங்கள்‌ முழுவதும்‌ நிரம்பி விடுவதாகவும்‌ பத்திரிகையில்‌ செய்தி வந்துள்ளது.

கொரோனா ஏற்றம்

கொரோனா ஏற்றம்

இதன்‌ காரணமாக, அரசுக்கு கூடுதல்‌ வருவாய்‌ கிடைப்பதோடு, பொதுமக்களும்‌, பண்டிகைகளை முன்னிட்டு தங்களுக்குத்‌ தேவையான ஆடை, அணிகலன்களை வாங்கிச்‌ செல்கின்றனர்‌. மக்கள்‌ இயல்பு நிலைக்கு சென்றுள்ளனர்‌ என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான்‌. அதே சமயத்தில்‌, இறங்குமுகமாகவே இருந்து கொண்டிருந்த கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை தற்போது ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது.

மூன்றாவது அலை

மூன்றாவது அலை

பண்டிகைக்‌ காலம்‌ என்பதால்‌, பெரும்பாலான கடைகளில்‌ கூட்டம்‌ அலைமோதுகிறது. செப்டம்பர்‌ மாதம்‌ ஒன்றாம்‌ தேதி அன்று 1,509 பேர்‌ கொரோனா தொற்றினால்‌ பாதிக்கப்பட்டனர்‌. ஆனால்‌, 23-09-2021 அன்றைய நிலவரப்படி, 1745 பேர்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. பாதிக்கப்பட்டோரின்‌ எண்ணிக்கை 23 நாட்களில்‌ 236 ஆகஉயர்ந்துள்ளது. இது இந்தியாவில்‌ மொத்தம்‌ பாதிக்கப்பட்டோரில்‌ 5.5 விழுக்காட்டிற்கும்‌ மேல்‌. அதேபோல்‌, செப்டம்பர்‌ ஒன்றாம்‌ தேதியன்று 20 ஆக இருந்த உயிரிழப்பு 23-09-2021 அன்று 27 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வு அச்சப்படும்‌ அளவுக்கு அதிகம்‌ இல்லையென்றாலும்‌, இந்த உயர்வு தொடர்ந்தால்‌, மூன்றாவது அலை ஆரம்பித்துவிடுமோ என்ற எண்ணம்‌ மக்களிடையே தோன்றிவிடும்‌.

கட்டுப்பாடு வேண்டும்

கட்டுப்பாடு வேண்டும்

இந்த எண்ணத்தை போக்க வேண்டுமென்றால்‌, அனுமதிக்கப்பட்ட அனைத்துக்‌ கடைகளுக்குள்ளும்‌ சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ வகையில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு கடுமையாக்கப்பட வேண்டும்‌ என்பதோடு, கடைகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்கள்‌ அதிகம்‌ உள்ள சாலைகளில்‌ அதிக நபர்கள்‌ கூடுவதும்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌.

முதல்வர் கவனிக்க வேண்டும்

முதல்வர் கவனிக்க வேண்டும்

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாக தலையிட்டு, அரசு விதித்திருக்கும்‌ கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அனைவரும்‌ பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யவும்‌, குறிப்பிட்ட சாலைகளில்‌ மக்கள்‌ கூட்டம்‌ அலைமோதாமல்‌ இருப்பதை கண்காணிக்கவும்‌, முகக்‌ கவசம்‌ அணிதல்‌, சமூக இடைவெளியை பின்பற்றுதல்‌ ஆகியவை குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கி, ஏற்ற இறக்கமாக உள்ள கொரோனா நோயினால்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையினை காண வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம்‌ தெரிவித்துள்ளார்.

English summary
covid 19 is on the rise in Tamil Nadu. ADMK co-ordinator O. Panneerselvam urges Tamil Nadu government to monitor compliance with corona restrictions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X