சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 தொகுதிகள் இருக்கு.. வெறும் 8ல் மட்டுமே அதிமுக - திமுக நேரடி மோதல்.. அம்புட்டு பயம்?!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது ?

    சென்னை: 8 லோக்சபா தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.

    இந்த ஆண்டு பிறந்தவுடனே நாடாளுமன்றத் தேர்தல் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பிப்ரவரி மாதம் வந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தன.

    இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் திமுக- காங்கிரஸ் கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவகாரங்கள் வெளியிடப்பட்டு விட்டன.

    சூடாகும் விழுப்புரம்.. நேருக்கு நேர் மோதும் பாமக- விசிக.. திருமாவின் ராஜதந்திரம் இதுதான்! சூடாகும் விழுப்புரம்.. நேருக்கு நேர் மோதும் பாமக- விசிக.. திருமாவின் ராஜதந்திரம் இதுதான்!

    20 தொகுதிகள்

    20 தொகுதிகள்

    அது போல் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல் இன்றைய தினம் வெளியானது. அதில் மொத்தம் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    8 இடங்களில் நேரடி போட்டி

    8 இடங்களில் நேரடி போட்டி

    அந்த 20 தொகுதிகளில் அதிமுக, திமுகவுடன் வெறும் 8 இடங்களில் நேரடியாக களம் காண்கிறது. இது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பிரமுகர்கள் எப்போது பேட்டியளித்தாலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று அவ்வப்போது கூறுவதுண்டு.

    சிங்கமாக இருந்த ஜெயலலிதா

    சிங்கமாக இருந்த ஜெயலலிதா

    அப்படியிருக்கையில் வெறும் 8 இடங்களில் போட்டியிடுவதுதான் அதிமுகவின் வீரமா என கேட்கத் தூண்டுகிறது. அது மட்டுமல்லாமல் ஜெயலலிதா இருந்த போது கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மொத்தம் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

    அதிமுகவினர் வருத்தம்

    அதிமுகவினர் வருத்தம்

    அது போல் அந்த மோடியா இந்த லேடியா என ஜெயலலிதா கர்ஜித்தார். ஆனால் இவர்களோ பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதுகின்றனர் என அதிமுகவினர் வருந்துகின்றனர். திமுக தனது கூட்டணி கட்சிக்கு கொடுத்துள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. எப்படியும் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால் திமுக கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. திமுகவுடன் நேருக்கு நேர் மோத அச்சம் கொண்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே மோதுவதாக திமுகவினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

    English summary
    ADMK directly contest DMK only in 8 constituencies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X