சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்த கட்சிகளின் குறி இந்த "ஒத்த" தொகுதி மீது.. நிற்க போவது "நம்மவர்" ஆச்சே.. சூடு பறக்குது!

மயிலாப்பூர் தொகுதியை அனைத்து கட்சிகளும் குறி வைத்து வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: இருக்கிற எல்லா தொகுதிகளையும் விட்டுவிட்டு, ஒரே ஒரு தொகுதியை மட்டும் பிரதான கட்சிகள் குறி வைத்து வருவது பலரின் புருவங்களை உயர்த்தி வருகிறது.
வழக்கமாக தேர்தலில் போட்டியிட தாங்கள் விரும்பும் தொகுதிகளை தலைமையிடம் வேட்பாளர்கள் கேட்பது இயல்பான ஒன்றுதான்..

இதற்கு காரணம், தங்கள் செல்வாக்கு என்ன என்பது தெரிந்துதான் அந்த தொகுதியை தருமாறு வலியுறுத்துகிறார்கள். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், கூட்டணி தலைமையோ, கட்சி தலைமையோ வேட்பாளர்கள் கேட்கும் தொகுதியை ஒதுக்குவார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

விருகம்பாக்கம் தொகுதி வேண்டும் என்று விஜயகாந்த் கேட்க காரணமும் இதுதான்.. அவருக்கு உடம்பு சரியில்லை, வேறு எங்கும் பிரச்சாரம் செய்ய முடியாது. விருகம்பாக்கம் என்றால் விஜயகாந்த்துக்கு நெருக்கமான ஒன்று, அவரது வீடும் பக்கத்திலேயே இருப்பதால் இந்த தொகுதியை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஹாட் டாப்பிக்

ஹாட் டாப்பிக்

ஆனால், ஒரே ஒரு தொகுதியை மட்டும் பலரும் குறி வைத்து வருவதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.. அதுதான் மயிலாப்பூர்.. தென்சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிதான் இந்த மயிலாப்பூர்.. திமுகவும் சரி, அதிமுகவும் சரி, 2 கட்சிகளுமே இங்கு வலுவானவைதான்.. இங்கு மட்டும் 2.69 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. பெரும்பாலும் பிராமண சமூகத்தினர் அதிகம்.. இந்த தொகுதிக்கு இப்போது திமுக, அதிமுக, கமல் என போட்டி போட்டுக் கொண்டு குறி வைத்து வருகின்றனர்.

விருப்பம்

விருப்பம்

திமுக தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வேலு, இங்கு போட்டியிட விரும்புவதாக செய்தியாளர்களிடமும் தெரிவித்திருந்தார்.. அதற்கு காரணம், கோயில்கள் அதிகம் உள்ள பகுதியாக விளங்கும் மயிலாப்பூரை, ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவிக்க, திமுகவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சொல்லி இருந்தார்.

மயிலை

மயிலை

இதை கேள்விப்பட்ட காங்கிரசும், இதே தொகுதியை குறி வைத்து வருகிறதாம். ஏற்கனவே கமலும் இங்குதான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.. எல்லாருமே இதே தொகுதியை குறி வைக்க சமுதாய வாக்குகள்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.. கடைசியில் யாருக்குதான் மயிலை கிடைக்க போகிறதோ.. பார்க்கலாம்..!

English summary
ADMK, DMK, MNM Parties targeting Mylapore constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X